Baakiyalakshmi serial: 43 வயசுல என்ன செய்யனுமோ அதை செய்யறேன்.. மாமியாருக்கு பாடம் எடுத்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்கள் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது.

முதலிடத்தில் சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் தொடர் நிலை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் உள்ளது.

தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வந்தாலும் பாக்கியா அடுத்தடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more interesting 03-10-23

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவயின் முன்னணி தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்டவர்களை கொண்டு சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். பெங்காலியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் தொடரில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையிலும் கதைக்களத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்றும் தெரியாத தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி அவரிடம் விவாகரத்து பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் கோபி. இதுகுறித்து தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, தன்னுடைய கணவனுக்கு தானே மனமுவந்து விவாகரத்து கொடுக்கிறார். மேலும் அவருடைய பெற்றோரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் பாக்கியா, தன்னுடைய குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை வெற்றிப் பாதையை நோக்கி வடிவமைக்கிறார்.

அடுத்தடுத்து மசாலா பிசினஸ், கேட்டரிங் பிசினஸ், கேன்டீன் கான்டிராக்ட், ஆங்கில வகுப்பு, கல்லூரி என பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அனைத்திலும் சாதித்து காட்டுகிறார். ஆங்கில வகுப்பில் பாக்கியாவிற்கு துணையாக சேர்கிறார் பழனிச்சாமி. இவர்களின் உறவை கொச்சைப்படுத்தி கோபி பேசினாலும், தங்களது நட்பில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் கோபி மட்டுமில்லாமல் அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் பாக்கியாவின் வெற்றியில் குறுக்கீடுகளை செய்து வருகின்றனர்.

பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை அவரிடம் இருந்து பறிக்கிறார் ராதிகா. இதனால் மனமுடைந்த நிலையில், மாமியார் ஈஸ்வரி தவிர்த்து மற்ற அனைவரும் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால் ஈஸ்வரியோ, பாக்கியா, அதிகமாக ஆடிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார். ராதிகாவின் நிறுவனத்தில் கேன்டீன் கான்டிராக்ட் எடுத்து, தற்போது அதை அவர் பறித்துவிட்டதாக குற்றம் சாட்டுவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more interesting 03-10-23

இதனால் மனமுடையும் பாக்கியா, தான் இனிமேல் கல்லூரிக்கு போகப் போவதில்லை என்ற முடிவை வெளிப்படுத்துகிறார். தனக்கு கிடைத்த சுதந்திரத்தால் தான் அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அதுகுறித்த தெளிவு தன்னுடைய மாமியாரின் பேச்சால் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார். தன்னுடைய இந்த 43 வயதில் தன்னால் எது முடியுமோ அதை பற்றி மட்டுமே தான் இனிமேல் சிந்திக்க உள்ளதாகவும் கூறுகிறார்.

இதை கேள்வியுறும் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழில், பாக்கியாவின் நண்பர் பழனிச்சாமியை வைத்து அவரிடம் பேச வைக்கிறார். தொடர்ந்து பாக்கியாவிடம் பேசும் பழனிச்சாமி, பாக்கியா சூரியனைப் போன்றவர் என்றும் மேகமூட்டங்கள் போன்ற பிரச்சனைகளால் அவர் மனமுடையக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். இதைக் கேட்கும் பாக்கியாவிற்கு தன்னுடைய பிரச்சினை குறித்த தெளிவு ஏற்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X