Baakiyalakshmi: மீண்டும் சமையல் கான்டிராக்ட்.. சான்ஸ் கொடுத்த நிறுவனர்.. கடுப்பில் ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக கடந்த சில மாதங்களாக கெத்துக் காட்டி வந்தது பாக்கியலட்சுமி தொடர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து சொதப்பலான எபிசோட்களை தந்து ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கிய பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியிலும் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது தொடர் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் நிலைக்கு பாக்கியலட்சுமி தள்ளப்பட்டுள்ளார்.

கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் சூழலில் இருந்து தப்பிய பாக்கியா: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து கெத்து காட்டி வந்தது பாக்கியலட்சுமி தொடர். தொடர்ந்து இந்தத் தொடரின் டிஆர்பி புள்ளிகள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடரின் ரேட்டிங் சரிந்து இரண்டாவது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது. முதலிடத்தில் சிறகடிக்க ஆசை மற்றும் மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரின் எபிசோட்கள் மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன.
இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களாக பாக்கியாவின் கல்லூரி பிரவேசத்தை மையமாக கொண்டு எபிசோட்கள் காணப்பட்ட நிலையில், கோபியின் பார்ட்டும் அதிகமாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கல்லூரி சேர்க்கை காரணமாக கேன்டீனில் பாக்கியா கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் நடைபெற்ற சக்சஸ் மீட் ஒன்றிற்கு சமையல் செய்த பாக்கியா டீம், சொதப்ப, அதனால் கேன்டீன் கான்டிராக்டே கைநழுவிப் போகும் சூழல் ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் நிறுவனர் மனதை மாற்றி, பாக்கியாவின் கான்டிராக்டை ரத்து செய்ய ராதிகா முயல்கிறார். இதுகுறித்து பாக்கியாவிடம் ஆத்திரத்தை கக்கிவிட்டு செல்கிறார். இதனால் பரிதவிககும் பாக்கியா, தன்னுடைய வாழ்க்கையை ஏற்றத்திற்கு உள்ளாக்கியா கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவிப் போனதை எண்ணி கதறுகிறார். அந்த நேரத்தில் அங்கே இருக்கும் பழனிச்சாமி, எந்த பிரசசினைக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும் என்பதை புரிய வைக்கிறார். நிறுவனரிடன் பேச அறிவுறுத்துகிறார்.
தன்னுடைய கேன்டீன் கான்டிராக்ட் அவ்வளவுதான் என்று நினைக்கும் பாக்கியா, மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான் என்று நினைக்கும் சூழலில், பழனிச்சாமியின் அறிவுரையை ஏற்று, நிறுவனரிடம் தன்னுடைய நிலையை எடுத்துரைக்கிறார். சந்தர்ப்ப சூழலால், சக்சஸ் மீட்டில் தன்னுடைய சமையல் சொதப்பியதை எடுத்து சொன்னவுடன், நிறுவனர் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்கிறார். அவர் சமையல் கான்டிராக்டை தொடரவும் அனுமதிக்கிறார். இனிமேல் தவறு நிகழக்கூடாது என்றும் கூறுகிறார்.
இதனால் பாக்கியா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நிறுவனருக்கும், இந்த இக்கட்டான சூழலில் தன்னை சிறப்பாக வழிநடத்திய பழனிச்சாமிக்கும் நன்றி கூறுகிறார். முன்னதாக ஃபைல் ஒன்றை ராதிகாவிடம் கொடுப்பதற்காக அங்கே வரும் கோபி, பழனிச்சாமியுடன் பாக்கியா பேசுவதை பார்த்து கடுப்பாகிறார். மேலும் ராதிகாவிடம், பாக்கியா கான்டிராக்டை எப்படியாவது கெடுக்கும்படி ஊக்குவிக்கிறார். ஆனால் கம்பெனியின் நிறுவனர் பாக்கியாவிற்கு ஆதரவாக நடந்துக் கொண்டதால் கடுப்பாகிறார் ராதிகா.


Click it and Unblock the Notifications











