Baakiyalakshmi: அடுத்தடுத்து கோபி கழுத்தை நெறிக்கும் வங்கிகள்.. களத்தில் இறங்கிய ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

தன்னுடைய கேன்டீன் கான்டிராக்டை இழந்துள்ள பாக்கியா, லோன், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்காக அதிகமான மெனக்கெடல்களை செய்து வருகிறார்.

இதனிடையே எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more interesting 17-10-2023

ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் பின்தங்களியுள்ள பாக்கியலட்சுமி தொடர், சேனலின் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சீரியலை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார். அதன் முனைப்பு சீரியலின் அடுத்தடுத்த கதைக்களங்களில் காணப்படுகிறது.

இந்தத் தொடரில் ராதிகாவால் தன்னுடைய கேன்டீன் கான்டிராக்டை இழந்துள்ள பாக்கியா, தொடர்ந்து அடுத்டுத்த முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவற்றையும் கோபி தடுக்கும் சூழலில், மசாலா பிசினஸ் மற்றும் சமையல் கான்டிராக்டை மட்டும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார். இந்நிலையில், தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் பாக்கியாவிற்கு சவால்களாக மாறுகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more interesting 17-10-2023

மாலினியிடம் சிக்கித் தவிக்கும் செழியன் குறித்து ஓரளவிற்கு யூகிக்கும் பாக்கியா, இரவு நேரங்களில் அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்கிறார். இதனிடையே எழிலின் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் உயிருடன் வந்துள்ளது குறித்து அவரது பெற்றோர் மூலம் பாக்கியாவிற்கு தெரியவருகிறது. இதனால் அடுத்தது எழில் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது குறித்து திகைக்கிறார் பாக்கியா.

இதனிடையே ராதிகாவின் அம்மாவின் 60வது பிறந்தநாள் வருவதையொட்டி மிகச்சிறப்பாக அதை கொண்டாட திட்டமிடுகிறார் ராதிகா. கோபி, இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அம்மாவிற்கு 4 சவரனில் செயின் வாங்கிப் போடவேண்டும் என்று திட்டவட்டமாக கூறுகிறார் ராதிகா. இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார் கோபி. பெட்ரோல் போடக்கூட காசில்லாமல் இருக்கும் தன்னிடம் 2 லட்சம் கேட்கும் ராதிகாவின் செயல் அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more interesting 17-10-2023

இதனிடையே அடுத்தடுத்து கிரெடிட் கார்ட் பில்லை கட்ட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கோபியின் கழுத்தை நெறிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. முன்னதாக ஒரு வங்கியின் ஊழியர்கள் வீடுவரை வந்து கிரெடிட் கார்ட் பில்லை கட்ட வலியுறுத்திய நிலையில், அவர்களை கோபி சமாளித்து அனுப்பினார். இந்நிலையில் தற்போது அடுத்த வங்கியிலிருந்து மற்றொரு ஊழியர் கிரெடிட் கார்ட் பில்லை கட்ட வலியுறுத்துகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு கோபி உள்ளாகும் நிலையில், ராதிகாவும் ஒருபுறம் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்காக 2 லட்சம் ரூபாய் கொண்டுவர சொல்கிறார். இதனால் கோபிக்கு முழி பிதுங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X