Baakiyalakshmi: கல்லூரியில் சேருவதற்காக பென்சில் பாக்ஸ் வாங்கிய பாக்கியா.. புலம்பித் தள்ளிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தன்னுடைய மகள் இனியாவுடன் கல்லூரியில் இணைய தயாராகிறார் பாக்கியா. என்ன பொருட்களை வாங்குவது என்று குடும்பத்தினர் இடையே அவர் கருத்து கேட்கிறார்.

முன்னதாகவே தான் ஒரு பொருளை வாங்கியுள்ளதாக குடும்பத்தினரிடையே காட்டுகிறார். அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 01-08-2023

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் தன்னுடைய முன்னாள் கணவன் கோபியிடம் 18 லட்சம் ரூபாயை மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கொடுக்கிறார் பாக்கியா. இதற்கு அவரது மகன்கள் எழில் மற்றும் செழியன் உதவுகின்றனர். இதையடுத்து பாக்கியா பெயரில் வீடு ரிஜிஸ்டர் ஆகிறது.

தொடர்ந்து அடுத்ததாக இனியாவை அவர் விரும்பும் கோர்சில் கல்லூரியில் சேர்த்து விடுகிறார் பாக்கியா. கோபியும் தன்னுடைய மகள் கல்லூரியில் சேரும் தருணத்தில் பங்கேற்கிறார். அங்கு பாக்கியா, ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவரது அடுத்தடுத்த வெற்றிப் பயணங்கள் அவருக்கு தொடர்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இதனிடையே, தன்னுடைய மகள் இனியாவுடன் தானும் கல்லூரியில் சேர விரும்புவதை தன்னுடைய மகன் எழிலிடம் கூறுகிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 01-08-2023

தன்னுடைய அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறார் எழில். அவர் கல்லூரியில் சேர்ந்ததை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும், அவரது இந்த ஆசைக்கு இணங்குகின்றனர். பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தியும் பாக்கியாவிற்கு ஓகே சொல்கிறார். தன்னுடைய அம்மாவின் இந்த முடிவு அதிர்ச்சியை கொடுத்தாலும் இனியாவும் ஒப்புதல் கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய அப்பா கோபியிடமும் இதை பகிர்கிறார் இனியா. இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் கோபி, கல்லூரியில் அனைவரும் கேலி செய்வார்கள் என்று நெகட்டிவ்வாக பேசுகிறார்.

அவரால் பாக்கியாவின் இந்த முடிவை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய மனைவி ராதிகாவிடம் சொல்லி அங்கலாய்க்கிறார். அவரும் பாக்கியா, இதில் நீடிக்க மாட்டார் என்று கூறுகிறார். சில தினங்களிலேயே ஓடி வந்துவிடுவார் என்றும் கூறுகிறார். இதனிடையே, கல்லூரியில் சேர்வதற்காக தான் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் கேட்டு லிஸ்ட் போடுகிறார் பாக்கியா. முன்னதாக அவர் வாங்கிய பென்சில் பாக்சை குடும்பத்தினரிடம் காட்டி அதிர்ச்சி அளிக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 01-08-2023

இதையடுத்து பென்சில் பாக்ஸ் எல்லாம் எடுத்து செல்லக்கூடாது, பௌச் தான் எடுத்து செல்ல வேண்டும் என்று இனியா கூற, அதையும் தன்னுடைய லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறார் பாக்கியா. இதனிடையே, தன்னுடைய அம்மாவின் அலப்பறைகளை பொறுக்க முடியாமல் இனியா அங்கிருந்து செல்கிறார். ஆனாலும் ஆர்வக்கோளாறில் ஜெனி, எழிலிடம் கல்லூரிக்கு வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டை தொடர்ந்து கேட்கிறார் பாக்கியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X