Baakiyalakshmi: கிரெடிட் கார்ட் கட்ட வழியில்லாமல் தவிக்கும் கோபி.. வீட்டிற்கே வந்த வங்கி ஊழியர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
தற்போது ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மாலினியிடம் சிக்கித் தவிக்கிறார் செழியன். அவரை கண்மூடித்தனமாக நம்புகிறார் ஜெனி.
இதனிடையே தன்னுடைய குடும்பம், இரண்டாவது குடும்பம் என அடுத்தடுத்த முட்டிக் கொண்டிருந்த கோபி, தன்னுடைய பிசினசில் கவனம் செலுத்தாமல் தற்போது திணறி வருகிறார்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை புகுத்தி வருகிறார் இயக்குநர். கோபி, ராதிகா மற்றும் பாக்கியாவை சுற்றியே இந்த தொடரின் கதைக்களம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, தன்னுடைய முன்னாள் குடும்பத்தை எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்க முடியாமல் மூக்கை நுழைத்து வருகிறார்.
தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியாவின் அடுத்தடுத்த முன்னேற்றங்களை ஜீரணிக்க முடியாமல், பழனிச்சாமியுடனான அவரது நட்பையும் பொறுக்க முடியாமல் திணறுகிறார் கோபி. இதனால் ராதிகாவின் வெறுப்பையும் சந்திக்கிறார். பாக்கியாவிடம் சவால் விட்டு, 20 லட்சம் ரூபாயை பெறும் கோபி, தான் கட்டிய வீட்டைவிட்டு மனைவி ராதிகாவுடன் வெளியேறுகிறார். இதுபோல தொடர்ந்து தன்னுடைய மனைவி பாக்கியாவிடம் தோல்விகளை சந்திக்கிறார்.
இதனால் அவருக்கு அவரது பெற்றோரிடமும் மரியாதை இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகும் கோபி, பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார். தன்னுடைய இரண்டு குடும்பங்களை பற்றியே சிந்தனை செய்துவரும் கோபிக்கு தன்னுடைய பிசினஸை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்.

தன்னுடைய மகளின் கல்லூரி ஃபீஸை கட்டுவதற்காக தன்னுடைய நண்பன் செந்திலிடம் கடன் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் அந்தத் தொகையை செந்தில் திருப்பி கேட்கிறார். அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் காரணங்களை சொல்லி தப்பிக்கிறார். இதனிடையே நான்கைந்து மாதங்களாக கிரெடிட் கார்ட் பில் கட்டாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கே வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். அவர்கள், கோபியின் பழைய வீட்டிற்கு சென்று விசாரிக்கின்றனர்.
அங்கு கோபி என்று யாரும் இல்லை என்று கூறும் எழில், ஒரு கட்டத்தில் அதிகமாக பேசி தன்னுடைய அம்மாவிற்கு குடைச்சலை கொடுக்கும் தன்னுடைய தந்தையை மாட்டிவிடும் நோக்கத்தில், அவரது வீட்டை காட்டுகிறார். அவர் மழுப்பிவிடுவார், அதனால் உடனடியாக கேட்டு கிரெடிட் கார்ட் தொகையை வாங்கிவிடுங்கள் என்றும் கூறுகிறார். இதையடுதது கோபியின் வீட்டிற்கு செல்லும் வங்கி ஊழியர்கள், அவரிடம் க்ரெடிட் கார்ட் குறித்து கேட்க, அவர்களிடம் டைம் கேட்டு அனுப்பி வைக்கிறார் கோபி. ராதிகாவிடமும் சமாளிக்கிறார்.
இதனிடையே, ஜெனிக்கு குழந்தை பிறந்ததால், மருத்துவமனையிலேயே இருக்கிறார் செழியன். இது தெரியாமல் மாலினி, உடனடியாக தன்னை பார்க்க வரும்படி நெருக்கடி கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தான் ஜெனியை விட்டு வரமுடியாது என்று செழியன் கூற, தான் தன்னுடைய கையை அறுத்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார் மாலினி. இதையடுத்து அலறியடித்துக் கொண்டு மாலினியின் வீட்டிற்கு செல்கிறார் செழியன். இதெல்லாம் தெரியாமல், செழியன், அலுவலகத்தில் அதிகமாக உழைப்பதாக கண்மூடித்தனமாக நம்புகிறார் ஜெனி. ஆனால் பாக்கியாவிற்கு செழியன் குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











