Baakiyalakshmi: நடுக்காட்டில் சிக்கிய ஈஸ்வரி.. பதற்றத்தில் ஆக்சிடெண்ட் செய்த கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். ஆனாலும் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் பின்தங்கியுள்ளது.

மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வகையில் இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை இணைத்து வருகிறார் சீரியல் இயக்குநர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 09-09-2023

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: தொடர்ந்து விஜய் டிவியின் முன்னணி தொடராக முதல் இடத்தில் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றால் கடந்த சில வாரங்களாக தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்து இரண்டாவது, மூன்றாவது இடங்களில் பின்தங்கி வருகிறது. கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்த நிலையில் பாக்கியலட்சுமி தொடர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் வகையில் பல பரபரப்பான காட்சிகளை தொடர்ந்து தொடரில் இணைத்து வருகிறார் சீரியல் இயக்குநர். மயூ பெரிய மனுஷியானதால், இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்கான கேரளா ரோட் ட்ரிப்பில் பங்கேற்க முடியாத சூழலில் கோபி அதிலிருந்து பின்வாங்குகிறார். தொடர்ந்து இந்த ட்ரிப்பை பாக்கியாவே மேற்கொள்கிறார். எந்த காரணத்திற்காகவும் தன்னுடைய மகளின் ப்ராஜெக்ட் நிற்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக காணப்படுகிறார்.

நடு வழியிலேயே அப்பாவிற்கு ஆக்சிடெண்ட் ஆனதாக காரை ஓட்டிவந்த டிரைவர் கழண்டுக்கொள்ள, தானே காரை ஓட்டி கேரளா வரையில் கொண்டு செல்கிறார் பாக்கியா. இடையில் கார் நடுசாலையில் மக்கர் செய்ய, வயதுப்பெண்ணுடன் ஒரு அம்மாவிற்கான பரிதவிப்பையும் அதே நேரத்தில் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து ஹோட்டலில் ரூம் கிடைக்காமல் திண்டாடும் அவர்கள், ஒருவழியாக புதிய ஹோட்டலை தேடி செட்டில் ஆகின்றனர்.

இந்நிலையில் மறுநாள் அருகில் இருக்கும் காடு ஒன்றில் தங்களது பயணத்தை தொடர்கின்றனர் பாக்கியா அண்ட் டீம். ஹோட்டல் ரூமிலேயே தங்கிக்கொள்ள வலியுறுத்தியும் கேட்காமல் அவர்களுடன் வரும் ஈஸ்வரி, கால்வலி காரணமாக பாதியிலேயே ஒரு இடத்தில் தங்கிவிடுகிறார். அவருடன் இருந்த செல்வியை தண்ணீர் எடுத்துவரச் சொல்லி அனுப்புகிறார் ஈஸ்வரி. அந்த நேரத்தில் தனியாக இருக்கும் ஈஸ்வரி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் சத்தத்தை கேட்டு பயந்து அங்கிருந்து செல்கிறார்.

இதையடுத்து வழி தெரியாமல் நடுக்காட்டில் அவர் சிக்கிக் கொள்கிறார். தொடர்ந்து அவரை இருக்க செய்துவிட்டு சென்ற இடத்தில் அவரை காணாமல் பரிதவிக்கின்றனர் பாக்கியா, இனியா மற்றும் செல்வி. இதையடுத்து ஈஸ்வரியை தேடிக் கொண்டு பாக்கியா மற்றும் கைட் செல்கின்றனர். அந்த இடத்திலேயே பாட்டி வருவாரா என்று காத்திருக்கும் இனியா, தன்னுடைய தந்தைக்கு கண்ணீருடன் போன் செய்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 09-09-2023

இந்த விஷயத்தை கேட்டு பதற்றமாகிறார் கோபி. இந்த நேரத்திலும் பாக்கியாவை இடியட் என்று திட்ட மறக்காத அவர், பதற்றத்துடன் சென்று சாலையில் ஒருவர் மீது காரை மோதுகிறார். இதனால் அங்கு கூட்டம் கூடுகிறது.தொடாந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் கோபி, 3000 ரூபாயை எடுத்துக் கொடுத்து அந்த நிலைமையை சமாளிக்கிறார்.இதனால் பாக்கியா மீது மேலும் அவருக்கு அதிகமான கோபம் வருகிறது. இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இதனிடையே நீண்ட தேடலுக்கு பிறகு ஈஸ்வரியை கண்டுப்பிடிக்கிறார் பாக்கியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X