Baakiyalakshmi: ராதிகாவின் பதவி உயர்வு.. அடுத்தக்கட்டத்தில் உதை வாங்க தயாராகும் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. அடுத்தடுத்த சூப்பர் எபிசோட்களை கொடுத்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பரபரப்பின் உச்சமாக, வீட்டை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்த பாக்கியா, தற்போது சிறிது சாந்தமடைந்துள்ளார்.
கோபியும் ராதிகாவும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையிலும் பாக்கியாவை மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் அமைதியாக விட மாட்டார்கள் என்பதே சீரியல் விதி.

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. மேலும் டிஆர்பியிலும் நம்பர் ஒன்னாக தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. தொடரின் கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அதை தீர்க்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் என சீரியல் களைகட்டி வருகிறது.
கடந்த சில வாரங்களாக, தன்னுடைய மாமியார் ஈஸ்வரியை அவமானப்படுத்திய ராதிகா மற்றும் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றும்வகையில் அவர்களிடம் இருந்து வீட்டை மீட்க பாக்கியா அதிகமான பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. பாண்டிச்சேரியில் இதற்காக அவர் எடுத்த பிரம்மாண்ட திருமண ஆர்டர், அவருக்கு கொடுத்த இக்கட்டான சூழ்நிலைகள், கோபியும் அதற்கு காரணமாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

ஆனால் பாக்கியாவின் இக்கட்டுகளில் இருந்து அவரை காக்கும்வகையில் அவருடன் கூடவே இருந்து வழிநடத்திய பழனிச்சாமியையும் பார்க்க முடிந்தது. இதன்மூலம் அந்த கேரக்டர்மீது ரசிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில், மீதம் கொடுக்க வேண்டிய 18 லட்சத்தை கோபியிடம் கொடுத்த பாக்கியா, அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்தார். இந்நிலையில், வீடும் பாக்கியா பேருக்கு ரிஜிஸ்டர் ஆகியுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக இனியாவின் +2 ரிசல்ட்டிற்காக குடும்பமே காத்திருக்கிறது. அவர் எந்தமாதிரியான மதிப்பெண்களை எடுப்பார் என்பதை அவரது குடும்பம் மட்டுமில்லாமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, ராதிகாவிற்கு அவரது அலுவலகத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதை மகிழ்ச்சியுடன் அவர் கோபி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பகிர்ந்துக் கொள்கிறார். ஆனால் இதையும் குறுக்கு புத்தியுடனேயே அணுகுகிறார் கோபி.

ஏற்கனவே ராதிகா, தான் கூறும் எதையும் கேட்கமாட்டார் என்று நினைக்கும் கோபி, பதவி மற்றும் சம்பள உயர்வு வந்துவிட்டால், தன்னை அவர் வேறு மாதிரியாக அணுகக்கூடும் என்று தன்னுடைய நண்பர் செந்திலிடம் புலம்புகிறார். ராதிகா வீட்டிற்கு எந்த பணமும் கொடுப்பதில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறார். இதனால் செந்தில் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் கோபி, தன்னுடைய அத்தையிடம் செய்யும் அலப்பறைகளையும் காண முடிந்தது.


Click it and Unblock the Notifications











