Baakiyalakshmi serial: தொடர்ந்து அலைகழிக்கப்படும் பாக்கியா.. ஊழியர்கள் முன்பு ஆத்திரப்பட்ட ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வருகிறார் பாக்கியா. கோபி மற்றும் ராதிகா கொடுத்துவரும் தொடர் டார்ச்சர்களை அமைதியாகவும் நிதானமாகவும் சந்தித்து அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார்.
தற்போது கேன்டீன் கான்டிராக்டை பாக்கியாவிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளார். அதிலிருந்து பாக்கியா எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாக்கியாவை தொடர்ந்து அலைகழிக்கும் ராதிகா: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக மாஸ் காட்டி வருகிறது. இந்தத் தொடரில் விருப்பமின்றி தன்னுடன் வாழ்வதாக சொல்லும் கணவனுக்கு தானே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறார் பாக்கியா. இதையடுத்து அவரது முன்னாள் கணவன் கோபி, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனாலும் அவருக்கு முதல் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாத சூழல் காணப்படுகிறது.
இதனிடையே தான் தன்னுடைய குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதிக்க பாக்கியாதான் காரணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் கோபி. இதனால் தொடர்ந்து பாக்கியாவின் அடுத்தடுத்த முன்னேற்றங்களுக்கு தடையாக இருக்கிறார். இதனால் அவர் தனது தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் மிகுந்த நெருக்கடியை சந்திக்கிறார். அவருடைய நண்பர் செந்திலும் இதை தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும் அதையெல்லாம் ஏற்கும் மனநிலை கோபிக்கு இல்லாத சூழல் நிலவுகிறது.
பாக்கியாவின் நண்பராக பழனிச்சாமி உள்ள நிலையில், அவர்களது நட்பு குறித்து சந்தேகப்படும் கோபி, தொடர்ந்து இதுகுறித்து இருவரிடமும் கேவலமாக கேள்வி எழுப்பி வருகிறார். தன்னை கேள்வி கேட்க அவர் யார் என்று பாக்கியா கேள்வி எழுப்பும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறார். பழனிச்சாமியின் வீட்டிற்கே சென்று இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.
இந்நிலையில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவும் தொடர்ந்து பாக்கியாவின் முன்னேற்றத்திற்கு தடையாகவே உள்ளார். அவரது நிறுவனத்தில் கேன்டீன் கான்டிராக்ட் எடுத்து பாக்கியா சிறப்பாக செயல்பட்டு வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முன்னதாகவே அவரது கான்டிராக்டை கேன்சல் செய்யும் சூழலை பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால் நிறுவன அதிகாரி கோடீஸ்வரன், பாக்கியாவிற்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்து அந்த பிரச்சினையில் இருந்து அவரை மீட்கிறார்.
இந்நிலையில், அவர் நிறுவனத்தின் பொறுப்பை ராதிகாவிடம் கொடுத்துவிட்டு இரண்டு மாத காலங்கள் அமெரிக்காவிற்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் ராதிகா, பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை ரத்து செய்வதிலேயே குறியாக இருக்கிறார். கோடீஸ்வரனையும் அணுக முடியாத நிலையில், பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார். இதுகுறித்து அவர் மீண்டும் ராதிகாவிடம் பேச செல்கிறார்.
ஆனால் அவரை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து அலைக்கழிக்கிறார் ராதிகா. மேலும் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் ஆத்திரத்துடன் பாக்கியாவை திட்டுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதனிடையே கோபிக்கு செந்தில் கொடுக்கும் அட்வைஸ், கணேஷின் பெற்றோரிடம் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் அமிர்தாவின் அம்மா மற்றும் மாலினியிடம் மேலும் நெருக்கமாகும் செழியன் என அடுத்தடுத்த காட்சிகளும் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளன.


Click it and Unblock the Notifications











