Baakiyalakshmi: ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்த இனியா.. கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்.. பரிதவிப்பில் பாக்கியா
சென்னை: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் முதலிடத்தில் உள்ள தொடர் பாக்கியலட்சுமி. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
வீட்டை மீட்கும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு கடந்த சில வாரங்களாக பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில் தற்போது பாக்கியாவின் மகள் இனியாவின் +2 ரிசல்ட் குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

+2வில் ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்த இனியா: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் சேனலின் முன்னணி தொடராக இருந்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களில் மூன்று பேரை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்களது நெருங்கிய சொந்தங்கள் சிலரை சேர்த்து இந்தத் தொடர் நிறைவான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தன்னுடைய கணவன் தன்னை ஏமாற்றி விவாகரத்திற்கு முயற்சித்த நிலையில், அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, தானே மனமுவந்து விவாகரத்தை கொடுக்கிறார்.
தொடர்ந்து கோபியை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கிறார். ஆனாலும் தன்னுடைய அம்மாவிடம் இருக்கும் பாசத்தை அஸ்திவாரமாக கொண்டு, மீண்டும் வீட்டிற்குள் தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் குடியேறுகிறார் கோபி. ஆனாலும் ஈஸ்வரிக்கும் ராதிகாவிற்கும் அடிக்கடி சண்டை வர, ஒருகட்டத்தில் வயதானவர் என்றும் பார்க்காமல் அவரை ராதிகா ஒருமையில் பேசி அவமானப்படுத்துகிறார். இதனால் வீட்டில் அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதை கேள்வி கேட்கும் பாக்கியா, அந்த வீட்டிற்கு தர வேண்டிய 18 லட்சம் ரூபாயை ஒரே மாதத்தில் கொடுப்பதாகவும், அப்படி கொடுத்தால் கோபி, தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சவால் விடுகிறார். அதிகமான மெனக்கெடல்களுடனும் தன்னுடைய மகன்களின் ஒத்துழைப்புடனும் வீட்டை மீட்கும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா வீட்டைவிட்டு வெளியேறும்படி செய்கிறார். வீடும் பாக்கியா பெயரில் ரிஜிஸ்டர் ஆகிறது.
பரபரப்பான இந்த எபிசோட்களை கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்நிலையில், தற்போது இனியாவின் +2 ரிசல்ட் வருகிறது. அவர் அதிகமான மதிப்பெண்களை பெற்று, ஸ்கூல் பர்ஸ்ட் வருகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், இந்த நேரத்தில் தன்னுடைய மகளுடன் இருக்க வேண்டிய பாக்கியா, ஒரு நிச்சயதார்த்த சமையல் ஆர்டரை எடுத்துவிட்டு, அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அந்த இடத்தில் சிக்னல் கிடைக்காததால், இனியா உள்ளிட்ட குடும்பத்தினர் பாக்கியாவை தொடர்பு கொண்டு சந்தோஷமான விஷயத்தை பகிர முடியவில்லை. இதனிடையே மிகுந்த பரிதவிப்புடன், இனியாவிற்கு கால் செய்யும் பாக்கியாவிற்கும் லைன் கிடைக்காததால், அவரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்நிலையில், ஸ்கூர் பர்ஸ்ட் எடுத்த இனியாவை பெற்றோருடன் வரும்படி பள்ளி நிர்வாகம் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











