Baakiyalakshmi serial: மீண்டும் கைகூடிய கேன்டீன் கான்டிராக்ட்.. பாக்கியாவின் புதிய நம்பிக்கை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சீரியலில் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவிப் போனதால் வீட்டிலுள்ளவர்கள் பாக்கியாவை திட்டித் தீர்க்கின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling

இந்நிலையில் மீண்டும் கேன்டீன் கான்டிராக்ட் கிடைக்கும் சூழல் தற்போது பழனிச்சாமியால் பாக்கியாவிற்கு உருவாகியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளது. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை இந்த தொடர் பெற்று வருகிறது. தொடர்ந்து முதலிடத்தை பெறவும் முயற்சித்து வருகிறது. இந்த தொடரில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா, அவருடைய பெற்றோர், தன்னுடைய மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காப்பாற்றும்வகையில் அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

குடைச்சல் கொடுக்கும் கோபி: ஒருபுறம் பாக்கியாவை விவாகரத்து செய்தாலும் அவரையே அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளையே நோட்டம் விட்டு வருகிறார் கோபி. பழனிச்சாமியுடன் பாக்கியாவின் நட்பை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் பாக்கியாவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். அவரது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். இந்த முயற்சியில் அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் ஈடுபடுகிறார். இதனால் பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகிறது.

நீடிக்கும் குழப்பம்: தொடர்ந்து மசாலா பிசினஸ், முன்னதாக பாக்கியா தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என அனைத்தையும் விட்டுள்ள பாக்கியா தற்போது தன்னுடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார். இதனிடையே உடல்நிலை சரியில்லாததால் பாக்கியா வீட்டிற்கு தன்னுடைய மகன் கோபியை அழைத்து வருகிறார் ஈஸ்வரி. தொடர்ந்து ராதிகாவும் அங்கு வர, குழப்பம் தொடர்கிறது.

ஜெனியின் ஆத்திரம்: இதனிடையே செழியன் -மாலினி விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவர, அங்கிருந்து தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார் ஜெனி. அவரை சமாதானப்படுத்தும் குடும்பத்தினர் மற்றும் செழியனின் முயற்சி தோல்வியடைகிறது. இதனால் செழியனின் வாழ்க்கை கேள்விக் குறியாகிறது. ஆனாலும் செழியனின் இந்த செயல் பாக்கியாவிற்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் ஜெனியின் பக்கம் பாக்கியா நிற்கிறார்.

பாக்கியாவின் புதிய முயற்சி: தன்னுடைய அனைத்து பிசினசும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டிற்காக முயற்சிக்கிறார் பாக்கியா. அதற்காக முன்பணமாக ஒரு லட்சத்தை கஷ்டப்பட்டு கட்டிய நிலையில், அந்த கேன்டீன் கான்டிராக்ட் ஆறுமுகம் என்பவருக்கு கிடைக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியாவை கோபி, ஈஸ்வரி உள்ளிட்டவர்களும் திட்டித் தீர்க்கின்றனர். இதனால் மனஉளைச்சலில் இருந்தாலும் அந்த கான்டிராக்ட் தனக்கு கிடைக்கும் என்று உறுதியுடன் பாக்கியா கூறுகிறார்.

மீண்டும் கான்டிராக்ட்: இதனிடையே, தற்போது பழனிச்சாமி மூலமாக அந்த கான்டிராக்ட் கிடைக்கும் சூழல் பாக்கியாவிற்கு உருவாகிறது. அந்த ஆறுமுகம் என்பவர், அந்த கான்டிராக்டை ஒன்றரை லட்சம் கொடுத்தால் பாக்கியாவிற்கே கொடுப்பதாக கூறுகிறார். ஏற்கனவே முன்பணம் கொடுத்த வகையில் ஒரு லட்சம் மாட்டியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒன்றரை லட்சம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் பாக்கியா முழி பிதுங்கி நிற்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

தொடரும் கோபியின் சந்தேகம்: இதனிடையே பழனிச்சாமியும் பாக்கியாவும் இந்த கான்டிராக்டரை பார்ப்பதற்காக சென்ற நிலையில், பாக்கியா வீடு திரும்ப தாமதமாகிறது. இதனால் ஏற்கனவே ஈஸ்வரி எரிச்சலில் இருக்கிறார். இதை கேட்ட கோபியும் ஈஸ்வரியை ஏற்றி விடுகிறார். முன்னதாக பழனிச்சாமியுடன் பாக்கியா செல்வதை தடுக்கும்வகையில் கோபி முயற்சி மேற்கொள்ள, ராதிகா அதை தடுக்கிறார். தற்போது பாக்கியாவும் ராதிகாவும் தங்களது நட்பை புதுப்பிக்கும்வகையில் நடந்துக் கொள்வது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X