Baakiyalakshmi: ஆங்கில வகுப்பிலிருந்து நின்ற பாக்கியா.. என்ன காரணம் பாருங்க!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களை கொண்டு சிறப்பான எபிசோட்களை டீம் கொடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியலில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது.

ஆங்கில வகுப்பிலிருந்து நின்ற பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வந்தது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், டிஆர்பியிலும் சிறப்பான இடத்தை பிடித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக Urban மற்றும் Rural கேட்டகரியில் இந்தத் தொடர் பின்தங்கியுள்ளது. இதையடுத்து முதலிடத்திற்கு சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் முந்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் பரபரப்பான எபிசோட்களை பாக்கியலட்சுமி தொடர் கொடுத்து வருகிறது.
கடந்த சில தினங்களாக கேன்டீனில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டது. சக்சஸ் மீட்டிற்காக சமையல் செய்த பாக்கியலட்சுமி டீம், அதில் சொதப்பியது. அனைத்தையும் மேற்பார்வையிட்டுவிட்டு தன்னுடைய கல்லூரிக்கு பாக்கியா சென்ற நிலையில், ஒன்றிரண்டு டிஷ்களை மட்டும் செய்ய வேண்டிய நிலையில், பாக்கியாவின் உதவியாளர்கள் அதில் சொதப்பினர். இதனால் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாக்கியாவை வெளியேற்ற காய் நகர்த்துகிறார் ராதிகா.
தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக மாறிய கேன்டீன் கான்டிராக்ட் தன்னுடைய கைநழுவி போவதை ஏற்க முடியாமல் பாக்கியா கதறுகிறார். இந்நிலையில் அந்த இடத்தில் இருக்கும் பழனிச்சாமி, அவரை தேற்றுகிறார். மேலும் அந்த கம்பெனி நிறுவனரிடம் போய் பேசவும் அவர் அறிவுறுத்துகிறார். தன்னுடைய வாழ்க்கையே பறிபோனதாக நினைக்கும் பாக்கியா, பழனிச்சாமியின் இந்த அட்வைசை ஏற்று நிறுவனர் கோடீஸ்வரனிடம் சென்று அழுகையுடன் தன்னுடைய நிலையை எடுத்து சொல்கிறார்.

கூடவே இந்த பிரச்சினைக்கு காரணமான செல்வியும் செல்கிறார். இந்நிலையில், இது முதல்முறை என்பதாலும் தவறு செய்வது மனித இயல்பு என்பதாலும் அவர்களது நிலையை எண்ணி, கோடீஸ்வரன் அவர்களின் தவறை ஏற்கிறார். அவர்கள் தொடர்ந்து கேன்டீன் கான்டிராக்டை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறார். ஆனால் இதுபோன்ற தவறு இனி நடக்கக்கூடாது என்றும் கன்டிஷன் வைக்கிறார். இதையடுத்து பயங்கரமான மனக்குழப்பத்தில் இருந்த பாக்கியாவிற்கு நிம்மதி கிடைக்கிறது.
தொடர்ந்து, தன்னுடைய இக்கட்டான சூழலில் தன்னை சிறப்பாக வழிநடத்திய பழனிச்சாமிக்கு பாக்கியா நன்றி கூறுகிறார். தொடர்ந்து முக்கியமான முடிவு ஒன்றையும் அவர் மேற்கொள்கிறார். அடுத்தடுத்த வேலைகளில் தான் தன்னை ஈடுபடுத்தியதால்தான் தன்னால், கேன்டீன் கான்டிராக்டை சரியாக செய்ய முடியவில்லை என்று உணர்ந்த பாக்கியா, ஆங்கில வகுப்பிலிருந்து நிற்கும் முடிவை எடுக்கிறார். அவருக்கு இந்த முடிவு மனவருத்தத்தை அளித்தாலும், இந்த முடிவால் கேன்டீன் கான்டிராக்டை சரியாக செய்ய முடியும் என்று அவர் யோசிக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து கேள்விப்படும் கோபி, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். தொடர்ந்து தன்னுடைய முன்னாள் மனைவி அடுத்தடுத்த சிறப்பான விஷயங்களை மேற்கொண்டு முன்னேறி வருவது குறித்து ஆத்திரத்தில் இருந்த கோபிக்கு பாக்கியா ஆங்கில வகுப்பிலிருந்து நின்றது ஆசுவாசத்தை கொடுக்கிறது. இது பாக்கியாவின் முதல் சரிவு என்றும் தொடர்ந்து அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்து பாக்கியா நடுத்தெருவில் நிற்பார் என்றும் கோபி தன்னுடைய மனதிற்குள் மருகுகிறார்.


Click it and Unblock the Notifications











