Baakiyalakshmi: மீண்டும் பாக்கியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. பறிபோகிறதா கேன்டீன் கான்டிராக்ட்?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா இடையில் நடந்துவரும் பனிப்போர் மற்றும் அதையொட்டிய காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது,
கோபியின் திருட்டுத்தனத்தை அறிந்த பாக்கியா, அவரது வீட்டிற்கே சென்று தன்னுடைய வீட்டின் சாவியை அதிரடியாக கேட்டுப் பெறுகிறார்.

பாக்கியாவை பரிதவிக்க செய்யும் ராதிகா: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கோபி, ராதிகா மற்றும் பாக்கியா இடையிலான பனிப்போர் இந்தத் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை கூட்டி வருகிறது. இனியாவின் ப்ராஜெக்ட் வேலைக்காக கேரளாவிற்கு சென்ற பாக்கியா அண்ட் டீம் அதிகப்படியான சிக்கல்களை சந்தித்து அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து சென்னை திரும்பியுள்ளது.
கேரளாவில் பாக்கியா காரை ஓட்டிவந்த நிலையில், நடுவில் சைக்கிளில் வரும் வயதானவர் ஒருவர் காரின் முன்பு விழுந்து லேசான அடி படுகிறது. இதனால் கைதாகும் சூழலில் சிக்குகிறார் பாக்கியா. இதற்கு காரணமாக அமைகிறார் கோபி. பாக்கியாவின் வீடு புகுந்து அவரது டிரைவிங் லைசென்சை திருடுகிறார். ஹோட்டல் ஒன்றில் தன்னுடைய நண்பன் செந்திலிடம் இதுகுறித்து ஆக்ரோஷமாக பேசும் கோபி, அந்த லைசென்சை உடைத்து போடுகிறார்.
அந்த ஹோட்டலுக்கு வரும் பழனிச்சாமி, இதைப் பார்க்கிறார். தொடர்ந்து அந்த லைசென்சை பாக்கியாவிற்கு அனுப்பி அவர் கைதாவதில் இருந்து காப்பாற்றுகிறார். சென்னை திரும்பும் பாக்கியா, இதை அறிந்து, கோபியின் வீட்டிற்கே சென்று தன்னுடைய வீட்டின் சாவியை கோபியிடம் இருந்து அதிரடியாக மீட்கிறார். இதனால் கோபி மட்டுமில்லாமல் ராதிகாவும் அதிகமாக டென்ஷன் ஆகிறார். இது கேன்டீனிலும் எதிரொலிக்கிறது.

இதனிடையே, கோடீஸ்வரன் ஹெட் ஆபீசுக்கு இரண்டு மாத காலம் செல்லும் நிலையில், கம்பெனியின் பொறுப்பு ராதிகாவிடம் தரப்படுகிறது. இதையடுத்து அவர் முதலில் பாக்கியாவின் அடிமடியில்தான் கைவைக்கிறார். பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை கேன்சல் செய்துவிட்டு வேறு ஒருவரிடம் கொடுக்க உள்ளதாக அவர் கூறுகிறார். முன்னதாகவே அவர் இந்த செயலில் ஈடுபட்ட நிலையில், கோடீஸ்வரன்தான் அதிலிருந்து பாக்கியாவை காப்பாற்றினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே சூழலுக்கு பாக்கியா தள்ளப்படுகிறார். இதனால் அடுத்தது என்ன நடக்கும் என்ற பரிதவிப்பில் ராதிகாவிடம் மீண்டும் பேசப் போவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இதனிடையே, பாக்கியாவிற்கு உதவி செய்த பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று மீண்டும் சத்தமிடுகிறார் கோபி. பாக்கியா மற்றும் பழனிச்சாமியை இணைத்து அவர் பேச, பழனிச்சாமி மட்டுமில்லாமல் அவரது அம்மாவும் கோபியிடம் ஆத்திரமடைகிறார்.


Click it and Unblock the Notifications











