Baakiyalakshmi serial: செயல்லதான் பதில் சொல்லனும்.. பாக்கியாவின் தீர்க்கமான முடிவு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
தற்போது ராதிகாவின் அதிரடி மற்றும் சூழ்ச்சி நடவடிக்கையால் பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகிறது.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார் பாக்கியா. இந்த சூழ்நிலையில், ஈஸ்வரி தவிர்த்து குடும்பத்தினர் அனைவரும் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கின்றனர்.
பாக்கியாவின் தீர்க்கமான முடிவு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து பல மாதங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர் பாக்கியலட்சுமி. தன்னுடைய முதல் இடத்தை சேனலின் சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்தாலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பணியை சிறப்பாகவே செய்து வருகிறது. இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களை கொடுக்கவும் தவறவில்லை. இதையெல்லாம் மீறி மீண்டும் தொடர் முதலிடத்தை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
தன்னுடைய முன்னாள் மனைவியின் வளர்ச்சி, பழனிச்சாமியுடன் அவருக்கு இருக்கும் நட்பு மற்றும் குடும்பத்தினர் அவருக்கு கொடுக்கும் சப்போர்ட்டை பொறுக்க முடியாமல் தொடர்ந்து பாக்கியாவை மட்டம் தட்டும் வேலையை மட்டுமே செய்து வருகிறார் கோபி. இதனால் தன்னுடைய சொந்த பிசினசையும் கவனிக்க முடியாமல் தடுமாறுகிறார். தன்னுடைய நண்பர் செந்திலுக்கு கொடுக்க வேண்டிய கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார்.
தன்னுடைய மகள் இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக தான் செல்ல முடியாத நிலையில், தனக்காக தன்னுடைய மகள் காத்திருப்பார் என்று எதிர்பார்க்கிறார் கோபி. ஆனால் அந்த ரோட் ட்ரிப்பை தானே காரை ஓட்டி சென்று சிறப்பாக முடித்துக் கொடுக்கிறார் பாக்கியா. இதனால் பாக்கியா மீதான கோபியின் கோபம் அதிகரிக்கிறது. தன்னுடைய குடும்பத்தில் தனக்கு சிறிதும் மரியாதை இல்லை என்ற நினைப்பை அடுத்தடுத்த நிகழ்வுகள் கோபிக்கு ஏற்படுத்துகிறது.

இதனிடையே, பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் கேன்சல் செய்கிறார் ராதிகா. கம்பெனி நிர்வாகம் அவரது கைகளுக்குள் வர, முதல் வேலையாக இதை செய்து முடிக்கிறார். தனக்கு அதிகமான நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்த இந்த பிசினஸ், கைமாறியதை பொறுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் பாக்கியா. இந்த விஷயத்தை கேள்விப்படும் கோபி உற்சாகக் கூத்தாடுகிறார்.
தொடர்ந்து மறுநாள் வாக்கிங் போகும்போது பாக்கியாவை வழிமறித்து, நான் என்று அதிகமாக ஆடியதால்தான் கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவிப் போனதாக கூறுகிறார். இதைக் கேட்கும் பாக்கியா, தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தாமல், கைமீறி போன பிசினஸ் மீண்டும் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். சமையல் கான்டிராக்ட் மீண்டும் வராது என்று அரிதியிட்டு கோபி கூற, அதுமட்டும்தான் பிசினசா என்று பதில் கேள்வி கேட்கிறார்.
மேலும் தன்னுடைய கேன்டீன் கான்டிராக்ட், தான் ஒழுங்காக வேலை செய்யாததால் தன்னை விட்டு போகவில்லை என்றும் சிலரின் சதித்திட்டத்தால்தான் போனது என்றும் பாக்கியா கூறுகிறார். இந்த நேரத்தில் அருகிலிருக்கும் செல்வி, பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்ய, வீட்டு வேலைக்காரியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க தவறியதாகவும் கோபி, பாக்கியாவிடம் மல்லுக்கு நிற்கிறார். இதை கேட்கும் செல்வி மனவருத்தம் கொள்கிறார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் பாக்கியா, நாம் செயலில் நம்மை நிரூபிப்போம் என்று உறுதியுடன் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











