Baakiyalakshmi: நான் சொல்லும் படிப்பைதான் படிக்கணும்.. பாக்கியாவிடம் மல்லுக்கு நிற்கும் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை தந்து வருகிறது.
சேனலின் முன்னணி தொடராக டிஆர்பியில் அதிக புள்ளிகளை தொடர்ந்து பெற்றுவருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
வீட்டை மீட்பதற்காக பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரின் போராட்டங்களை அடிப்படையாக கொண்டு கடந்த சில வாரங்களாக பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பானது.

இனியா படிப்பு விஷயத்தில் பாக்கியாவுடன் மல்லுகட்டும் கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள தொடர் பாக்கியலட்சுமி. சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று அர்பன் கேட்டகரியிலும் மற்ற சேனல்களின் தொடர்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாக்கியா, கோபி, ராதிகா என குறைவான கேரக்டர்களை லீட் கேரக்டர்களாக கொண்டு, இந்தத் தொடர் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
கோபியிடம் இருந்து வீட்டை மீட்கும்வகையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு போராட்டங்களை பாக்கியா எதிர்கொள்வதாக எபிசோட்கள் காணப்பட்டன. தான் இதுவரை எதிர்கொள்ளாத பெரிய திருமண சமையல் கான்டிராக்டை எடுத்து, பல சிரமங்களுக்கிடையில் அதை செய்தார் பாக்கியா. அவருக்கு பழனிச்சாமி உதவி செய்ய, கோபியோ அந்த இடத்திலும் அவரது முன்னேற்றத்தை தடுத்தார். அவரை மாட்டிவிட பல முயற்சிகளை அவர் செய்தார்.
இந்நிலையில் அந்த திருமண கான்டிராக்டை சிறப்பாக முடித்துக் கொடுத்து பாராட்டுக்களையும் பணத்தையும் அள்ளினார் பாக்கியா. தொடர்ந்து மகன்கள் எழில் மற்றும் செழியனும் தங்கள் பங்கிற்கு கைக்கொடுக்க, கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சத்தை திருப்பிக் கொடுத்து, வீட்டை மீட்ட பாக்கியா, வீட்டை எழுதியும் வாங்குகிறார். இதையடுத்து வீட்டை விட்டு கோபியும் ராதிகாவும் வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் இனியா +2வில் அதிகமான மதிப்பெண்களை பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வெற்றி பெறுகிறார். அவரை பள்ளியிலும் அசோசியேஷனிலும் பாராட்டி விழா எடுக்கின்றனர். அந்த நேரத்தில் பாக்கியா, சமையல் செய்யப்போன இடத்தில் பிரச்சினையில் சிக்கி, இந்த விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் இனியாவை குடும்பத்தினர் அனைவரும் சமாதானம் செய்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த பிரச்சினையை எடுத்து வருகிறார் கோபி. தான் சொல்லும் படிப்பைதான் இனியா படிக்க வேண்டும் என்று மல்லுக்கு நிற்கிறார். ஆனால் இனியாவோ விஸ்காம் படிப்பதற்கு விரும்புகிறார். மீடியாவில் தான் வேலை செய்ய விரும்புவதாக கூறுகிறார். அதற்கு பாக்கியாவும் சம்மதம் கூறுகிறார். ஆனால் தன்னுடைய தந்தையின் பேச்சை மீற முடியாமல் தவிக்கிறார் இனியா. தொடர்ந்து இனியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார் பாக்கியா. ஆனால் தன்னுடைய மகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய தான் சொல்லும் படிப்பையே படிக்க வேண்டும் என்கிறார் கோபி.
தன்னுடைய மனதிற்கு பிடித்தமான படிப்பை படித்தால் மட்டுமே மன நிறைவுடன் வேலை செய்ய முடியும் என்று பாக்கியா அட்வைஸ் செய்ய, இனியாவும் தான் விஸ்காம்தான் படிக்க உள்ளதாக கூறுகிறார். இதை கேட்கும் கோபி, பாக்கியாவிற்கு படிப்பை பற்றி ஒன்றும் தெரியாது என்று மட்டம் தட்டுகிறார். மேலும் தான் சொல்லும் படிப்பைதான் இனியா படிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார். இதனால் குடும்பத்தில் அதிகமான குழப்பம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications











