Baakiyalakshmi: ஏய் என விரல் நீட்டிய பாக்கியா.. அரண்டுப்போன கோபி!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது.
இந்த தொடரில் குறைவான கேரக்டர்களுடன் நிறைவான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் இயக்குநர்.
இந்தத் தொடரில் தற்போது தன்னுடைய கணவன் கோபியிடம் போட்ட சவாலுக்காக அதிகமான ரிஸ்க் எடுத்து வருகிறார் பாக்கியா. ஆனால் அங்கேயும் கோபியின் அராஜகம் அவரை பின்தொடர்கிறது.

பாக்கியா கோபத்தால் அரண்டுபோன கோபி: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி வருகிறது. இந்தத் தொடர் கடந்த சில வாரங்களாக அர்பன் கேட்டகரியின் முதலிடத்தில் இடம்பிடித்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களது சில உறவினர்கள் என குறைவான கேரக்டர்களே இந்தத் தொடரில் உள்ளது இந்தத் தொடரில் சிறப்பான விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோபி தன்னுடைய மனைவி மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு அவரே ராஜாவாக இருக்கிறார். அவருக்கு அந்த அளவிற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர் மட்டுமே அந்த வீட்டில் சம்பாதிப்பவராக, குடும்பத்தை நிர்வகிப்பவராக இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ அவர் முடிவெடுப்பதும் அதற்காக ராதிகாவை இரண்டாவது மணம் செய்துக் கொள்ள நினைப்பதுவுமே அவரது வாழ்க்கையில் அவருக்கு ஏழரையை கொடுக்கிறது.
அந்த வகையில் தன்னுடைய அப்பாவி மனைவி பாக்கியாவை ஏமாற்றி, டைவர்ஸ் பெற நினைக்கும் கோபிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளே காத்திருக்கிறது. கோபி -ராதிகா விவகாரம் தெரியவர, பாக்கியா அதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாமல் தவிக்கிறார். தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை தானே முன்வந்து கொடுக்கிறார். தொடர்ந்து கோபியை வீட்டை விட்டு துரத்தும்படி செய்கிறார்.

தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தானே களத்தில் இறங்குகிறார். பொடி வகைகளை தயாரித்து விற்றுக் கொண்டிருந்த அவருக்கு, கேன்டீன் கான்டிராக்ட் மற்றும் சமையல் கான்டிராக்ட்கள் கிடைக்கின்றன. இதையடுத்து அவர் தன்னை சிறிது சிறிதாக பெரியதாக முன்னேற்றுகிறார். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக ஆங்கில வகுப்பிற்கும் செல்கிறார். இவை அனைத்தும் கோபிக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் பாக்கியா -பழனிச்சாமியின் நட்பையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் அடுத்தடுத்து அவர்களை சந்தேகத்துடனேயே அவர் அணுகுகிறார். பழனிச்சாமி வீட்டிற்கே சென்று எச்சரித்துவிட்டு வருகிறார். இதனால் பாக்கியாவின் கோபத்திற்கும் உள்ளாகிறார். இந்நிலையில், ஒரு சண்டையில் வீட்டு பிரச்சினை தலைதூக்குகிறது- இதையடுத்து ஒரு மாதத்தில் வீட்டிற்கு தர வேண்டிய 18 லட்சம் ரூபாயை தான் திருப்பித் தருவதாக சவால் விடுகிறார் பாக்கியா. அப்படி கொடுத்துவிட்டால் கோபி, தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த சவாலை கோபியும் ஏற்கிறார்.
இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் பெரிய பிரம்மாண்டமான கல்யாணத்தின் ஆர்டரை பழனிச்சாமி மூலம் பெறுகிறார் பாக்கியா. அந்த திருமணத்திற்கு தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வருகிறார் கோபி. அங்கும் பாக்கியா மற்றும் பழனிச்சாமியை ஒன்றாக பார்த்துவிட்டு, பழனிச்சாமியிடம் பலர் பார்க்க சண்டையிடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் பாக்கியா கொதித்தெழுகிறார். கோபியும் பாக்கியா மீது கோபம் கொள்கிறார்.
கோபியை பார்த்து இந்த விவகாரம் குறித்து சண்டையிடும் நோக்கத்தில் கல்யாண ரெசார்ட்டில் அவரை தேடியலைகிறார் பாக்கியா. பாக்கியாவிடம் சண்டை பிடிக்கும் வகையில் கோபி தானே வந்து சிக்குகிறார். இதையடுத்து இவர்களுக்குள் மிகப்பெரிய மோதல் வெடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பாக்கியா முந்திக்கொள்கிறார். துப்பாக்கிக் கிடைத்தால் கோபியை சுட்டுவிடும் ஆத்திரத்தில் இருக்கும் பாக்கியா, கோபியை பார்த்தவுடன் ஏய் என்று தன்னுடைய கைவிரலை உயர்த்தி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதைப்பார்த்து கோபி அரண்டு போவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











