Baakiyalakshmi: வீட்டைவிட்டு துரத்திய பாக்கியா.. ஆத்திரத்தில் சுவற்றில் முட்டும் கோபி!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி பரபரப்பான கட்டங்களில்தான் தொடர்ந்து எபிசோட்களை வெளியிட்டு வருகிறது.

கோபியிடம் விட்ட சவாலையடுத்து அவருக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாய் பாக்கியை உரிய நாளில் செட்டில் செய்கிறார் பாக்கியா.

தன்னை தன்னுடைய வீட்டிலிருந்து, தன்னுடைய பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் இருந்து பாக்கியா பிரித்துவிட்டதாக ஆத்திரமடைகிறார் கோபி.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes fans so thrilled

பாக்கியலட்சுமி புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடராக டிஆர்பியிலும் அந்தத் தொடரின் முதன்மை தொடராக தொடர்ந்து நீடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களால் இந்தத் தொடருக்கான ரசிக்கள் வட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தொடர் அர்பன் கேட்டகரியில் மற்ற சேனல்களின் தொடர்களை பின்னுக்குத் தள்ளி முதன்மை இடத்தில் நிலைக் கொண்டுள்ளது.

சீரியல் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. ராதிகா -ஈஸ்வரி உடனான சண்டை, ஈஸ்வரியை ஒருமையில் திட்டும் ராதிகா, வீட்டை மீட்க சவால்விடும் பாக்கியா, சவாலை ஏற்கும் கோபி, சவாலுக்காக பெரிய திருமண ஆர்டரை கையிலெடுத்து போராடும் பாக்கியா, 10 லட்சத்தை கொடுத்து கைகொடுக்கும் செழியன் மற்றும் எழில், குறிப்பிட்ட நாளில் பணத்தை செட்டில் செய்யும் பாக்கியா, வீட்டைவிட்டு துரத்தப்படும் கோபி என அடுத்தடுத்த சிறப்பா எபிசோட்களை கடந்த சில வாரங்களில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தன்னுடைய பெற்றோர், குழந்தைகள் என யாராவது தன்னை அந்த வீட்டிலேயே இருக்க சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொருவரிடமும் பேச முற்பட்டார் கோபி. ஆனால் அவர்கள் அனைவரும், கோபியின் குடைச்சல் மற்றும் சுயநலமாக ராதிகாவை திருமணம் செய்தது போன்றவற்றை சுட்டிக் காட்டி பேசுகின்றனர். இதனால் ஆத்திரம், ஏமாற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் கோபி, அவமானத்திற்குள்ளாகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes fans so thrilled

இதனிடையே ராதிகாவின் வீட்டிற்கு வரும் கோபியை, ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரும் ஏற்றி விடுகின்றனர். அவரது குடும்பத்தனர் யாருமே கோபியை மதிக்கவில்லை என்று ராதிகா உசுப்பேற்றுகிறார். இதனால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் கோபி, மேலும் ஆத்திரமடைகிறார். தன்னுடைய குடும்பத்தினர் தன்னை வெறுத்து ஒதுக்கி பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுவற்றில் தன்னுடைய கைகளால் குத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

தொடர்ந்து பாக்கியாவை தான் நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று ராதிகாவிடம் சபதம் செய்கிறார் கோபி. தற்போது பாக்கியாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் சப்போர்ட்டாக இருக்கும் தனது குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கும்படி தான் செய்வேன் என்றும் இனிமேல்தான் தன்னுடைய உண்மையான முகத்தை அனைவரும் பார்ப்பார்கள் என்றும் அவர் சபதமிடுகிறார். மேலும் ஆத்திரத்தில் மீண்டும் குடிக்க செல்கிறார். அங்கும் தன்னுடைய நண்பரிடம் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாக தற்போதைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X