Baakiyalakshmi serial: நீ ரொம்ப ஆடிட்ட.. பாக்கியாவை கலங்கடிக்க வைத்த ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இரண்டாவது இடத்தையே பிடித்து வருகிறது. இந்த வாரமும் டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பிடித்துள்ள இந்தத் தொடர், சிறகடிக்க ஆசை தொடரிடம் முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளது.
தொடரில் தற்போது ராதிகாவின் அதிரடி நடவடிக்கையால் தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்துவந்த கேன்டீன் கான்டிராக்டை இழக்கும் சூழல் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் புதிய ப்ரமோ: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், சேனலின் முதலிடத்தை மீண்டும் பெற தொடர்ந்து போராடி வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர், சில வாரங்களாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையே பிடித்து வருகிறது. மீண்டும் முதலிடத்தை பெறும்வகையில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை இயக்குநர் தந்து வருகிறார். ஆனாலும் பாக்கியாவை மற்றும் அவரது முன்னேற்றத்தையொட்டியே பாக்கியலட்சுமி சீரியல் காணப்படுவதும் சீரியலின் பின்னடைவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தத் தொடரில் இனியாவிற்காக பாக்கியா ஏற்ற கேரளா ரோட் ட்ரிப், அதில் சந்தித்த பிரச்சினைகள், கைதாகும் சூழல், பழனிச்சாமியின் உதவி, கோபியின் ஆத்திரம் உள்ளிட்டவை கடந்த சில வாரங்களாக காட்சிப்படுத்தப்பட்டது. இவை இந்த சீரியலை மிகச்சிறப்பாக ரசிகர்களிடையே கொண்டு சென்றது. இந்த பயணத்தை நிறைவு செய்துவிட்டு பாக்கியா மீண்டும், தன்னுடைய கேன்டீன் கான்டிராக்டை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட முயற்சிக்கிறார்.
ஆனால் கம்பெனி நிர்வாகத்தை கையில் பெற்ற ராதிகா, பாக்கியாவின் இந்த வளர்ச்சிக்கு தடை போடுகிறார். கேன்டீன் கான்டிராக்டை பாக்கியாவிடம் இருந்து பறிக்கிறார். இதனால் தன்னுடைய வாழ்வாதாரம் மட்டுமில்லாமல் தனக்கு கீழ் பணியாற்றும் பெண்களின் வாழ்வாதாரமும பறிபோனதையடுத்து பதைபதைக்கிறார் பாக்கியா. இதுகுறித்து தொடர்ந்து ராதிகாவிடம் கோருகிறார். இதனால் சற்று கீழிறங்கி வருவதாக காட்டிக் கொள்ளும் ராதிகா, ஊழியர்களிடையே வோட்டிங் நடத்துகிறார்.
ஆனால் வோட்டிங்கிலும் பாக்கியாவிற்கு சாதகமில்லாத சூழலே ஏற்படுகிறது. அவர் கேன்டீர் கான்டிராக்டை இழந்து, மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வெளியேறுகிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கும் பாக்கியாவிற்கு அனைத்தும் சரியாகிவிடும என்று செல்வி ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து குடும்பத்தினரின் ஆதரவும் தனக்கு கண்டிப்பாக இருக்கும் என்று பாக்கியா நம்பும் சூழலில் அவரது மாமியார் ஈஸ்வரி வேறு மாதிரியாக நடந்துக் கொள்கிறார்.

கோபியை விவாகரத்து செய்தபின்பு பாக்கியா அதிகமாக ஆடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். மசாலா பிசினஸை மட்டுமே சரியாக திட்டமிட்டு செய்திருக்க வேண்டும், ஆனால் பாக்கியாவோ, தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறிக்கொண்டு, கேன்டீன், சமையல் கான்டிராக்ட்களை எடுத்ததுடன், ஆங்கில வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு என்று அதிகமாக ஆடிவிட்டதாக பாக்கியாவை குறை கூறுகிறார். இதனால் பாக்கியாவின் மனநிலை மேலும் மோசமாக மாறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
இந்நிலையில் பாக்கியாவின் இந்த நிலை குறித்து ராதிகாவிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் கோபி, பாக்கியவை நேரில் பார்த்து கலாய்க்கிறார், இதற்கு பாக்கியாவும் பதிலடி கொடுக்கிறார். இதனிடையே அமிர்தா மற்றும் தன்னுடைய குழந்தையை காணும் தீவிரத்தில் கணேஷ், தன்னுடைய பெற்றோரிடம் அதிகமாக கோப்படுகிறார். அவர்கள் தன்னிடம் எதையோ மறைப்பதாகவும் அவர் கருதுகிறார். இதையைடுத்து அமிர்தா மற்றும் நிலாவை தேடும்பொருட்டு அவர் சென்னை செல்கிறார்.


Click it and Unblock the Notifications











