Baakiyalakshmi: பாக்கியலட்சுமி பிஏ.. பாக்கியாவின் கனவை தூண்டிவிட்ட பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
இந்தத் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்து தன்னை அடுத்தக் கட்டங்களுக்கு முன்னேற்றி குடும்பத்தையும் முன்னேற்றி வருகிறார் பாக்கியா.
கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிய பின்பு, அவரது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று எண்ணியவர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் கொடுத்து வருகிறார்.

ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த பாக்கியலட்சுமி புதிய எபிசோட்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து சேனலின் முன்னணி தொடராக மாஸ் காட்டி வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களது சில உறவுகளை மட்டுமே கேரக்டர்களாக கொண்டுள்ள இந்தத் தொடர், ரசிகர்களுக்கு சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. சிறப்பான எபிசோட்களால் தொடர்ந்து ரசிகர்களை என்கேஜ் செய்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியாவின் முன்னேற்றமும் கோபியின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் அரங்கேறி வருகிறது.
கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்பு, பாக்கியா நிலைகுலைந்துவிடுவார் என கோபி மட்டுமில்லாமல் பார்த்த ரசிகர்களும் நினைக்கத்தான் செய்தார்கள். ஆனால் தன்னுடைய தொடர்ந்த செயல்பாடுகள்மூலம் அந்த நினைப்பை பொய்யாக்கியுள்ளார் பாக்கியா. சாதாரணமாக மசாலா செய்து விற்றுவந்த பாக்கியா, தற்போது, பிரம்மாண்டமான சமையல் கான்டிராக்ட்களை எடுப்பதாகட்டும், கேன்டீன் கான்டிராக்ட்டை சிறப்பாக நடத்துவதாகட்டும், ஆங்கில வகுப்பிற்கு சென்று அந்த மொழியில் பின்னி பெடலெடுப்பதாகட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் சிறப்பாக செயல்படுவதாகட்டும் தன்னை ஒரு வெற்றிக் குறியீடாகவே காட்டி வருகிறார்.
ஆனாலும் தன்னுடைய மாமனார் -மாமியாரிடம் அடங்கிப் போவது போன்றவற்றை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் சுவாரஸ்யமான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தன்னுடைய மகள் இனியாவை கல்லூரியில் சேர்ப்பதற்காக செல்லும் பாக்கியாவிற்கு, தான் படிக்காமல் விட்ட கல்லூரி படிப்பின்மீது ஏக்கமும் ஆசையும் ஏற்படுகிறது. தன்னுடைய வயதை கருத்தில் கொண்டு அந்த நினைப்பை ஒதுக்கித் தள்ளுகிறார்.
இந்நிலையில், ஆங்கில வகுப்பில் அவரிடம் பேசும் பழனிச்சாமி, அவரது ஆசைக்கு தீனி போடுகிறார். பாக்கியலட்சுமி பிஏ, பிஎஸ்சி, பிகாம் என்று பெயருக்கு பின்னால் டிகிரி இருந்தால் கெத்தாக அமையும் என்றும், டிகிரி இல்லாததால் அவருக்கு நிராகரிக்கப்பட்ட லோனும் கிடைக்கும் என்றும் பழனிச்சாமி கூறுகிறார். படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதையும் புரிய வைக்கிறார். இதையடுத்து இதுகுறித்து தன்னுடைய மகன் எழிலிடம் பேசுகிறார் பாக்கியா.
தன்னுடைய அம்மாவின் ஆசைகளை எப்போதுமே நிறைவேற்றி வைப்பதில் முதல் ஆளாக இருப்பவர் எழில். அவரிடம் தன்னுடைய கல்லூரி படிப்பிற்கான ஏக்கத்தை பாக்கியா கூற, உடனடியாக ஃபார்ம் வாங்கி, அவரை கல்லூரியில் சேர்த்தும் விடுகிறார் எழில். தன்னுடைய மகளின் கல்லூரியிலேயே மாணவியாகிறார் பாக்கியா. இதுகுறித்து பேசி, தன்னுடைய மாமனார் குடும்பத்தினரிடம் சம்மதமும் வாங்குகிறார்.
ஆனால் தன்னுடைய கல்லூரியிலேயே தன்னுடைய அம்மா ஸ்டூடண்ட்டானதில் இனியாவிற்கு விருப்பம் இல்லாத நிலை காணப்படுகிறது. பாக்கியா குடும்பத்தினர் அனைவரிடமும் தன்னுடைய கல்லூரி சேர்க்கை குறித்து பேசி சம்மதம் வாங்கும் நிலையில், தன்னுடைய அம்மா, தன்னுடைய கல்லூரியிலேயே இணைந்ததில் அவர் ஏமாற்றமடைகிறார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கவுள்ள நிலையில், இனிமேல்தான் கச்சேரி களைகட்டப்போகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











