Baakiyalakshmi: பெரிய டாஸ்க்கை கையிலெடுக்கும் பாக்கியா.. வீட்டை மீட்பாரா?

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி, அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை தற்போது தன்வசமாக்கி வருகிறது.

இந்தத் தொடரில் மிகவும் குறைவான கேரக்டர்களை மட்டுமே கொண்டு, நிறைவான எபிசோட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார்.

பெங்காலியில் சிறப்பான வெற்றி பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக உருவாகியிருந்தாலும் தமிழ் ரசிகர்களை கருத்தில் கொண்டு தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes every fan happy on Baakiya character

வீட்டை மீட்க போராடும் பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று முக்கியமான கேரக்டர்கள் மற்றும் அவர்களது உறவுகள் என மிகவும் குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் இயக்குநர். பெங்காலியில் மிகவும் பிரபலமான ஸ்ரீமோயி என்ற தொடரின் தழுவலாக இந்த தொடர் உருவாகியுள்ள போதிலும், தமிழுக்காக பல மாறுதல்கள் தொடரில் செய்யப்பட்டுள்ளன.

தன்னுடைய அப்பாவி மனைவி பாக்கியாவை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கிறார் கோபி. ஆனால் ஒருகட்டத்தில் இந்த உறவு குறித்து தெரியவரும்போது உடைந்துப்போகும் பாக்கியா, கணவன் கேட்ட விவாகரத்தை மனமுவந்து கொடுக்கிறார். தொடர்ந்து அவனை வீட்டை விட்டே வெளியேறும் சூழலையும் உருவாக்குகிறார். கணவனின் பெற்றோர், தன்னுடைய மகன்கள், மகள் என தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்கிறார்.

தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி, கேன்டீன், கான்டிராக்ட் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னுடைய தொழிலை எடுத்துச் செல்கிறார். அப்பாவியாக தன்னுடைய காலை சுற்றிவந்த தன்னுடைய மனைவி எப்படி இப்படி என்று கோபி கேரக்டரே யோசிக்கும் அளவில் பாக்கியாவின் முன்னேற்றம் காணப்படுகிறது. இதனிடையே, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்யும் கோபிக்கு வாழ்க்கையில் அவர் தேடிய இனிமை கிடைக்காமல் போகிறது.

தான் இரண்டாவது திருமணம் செய்ய எடுத்த முடிவு தவறானதோ என்று அவரே யோசிக்கும் அளவில் அவரது வாழ்க்கை பாதை மாறுகிறது. மறுபுறம், எப்போதும் தன்னுடைய கணவனின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி கவலையுடன் நாட்களை நகர்த்தி வந்த பாக்கியா, தொழில், குடும்பம், ஆங்கில வகுப்பு, அதன்மூலம் கிடைக்கும் நட்பு என்று தன்னுடைய வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்கிறார்.

இந்நிலையில், கோபி மற்றும் அவரது இரண்டாவது மனைவி, அவரது மகள் என பாக்கியாவின் வீட்டிலேயே தங்க, அங்கே கோபியின் அம்மா ஈஸ்வரி மற்றும் ராதிகா இடையில் பிரச்சினைகள் வெடிக்கிறது. ஒரு சண்டையில், ராதிகா அவரை ஒருமையில் திட்டி, வீட்டை விட்டு போகும்படி கூறுகிறார். இதையடுத்து கோபத்தில் பொங்கும் பாக்கியா, தன்னுடைய மாமியாருக்காக தன்னுடைய கணவன், ராதிகாவிடம் சண்டைக்கு போகிறார். தொடர்ந்து, தாங்கள் இருக்கும் வீட்டிற்கு தர வேண்டிய பணத்தை ஒரு மாதத்தில் கொடுப்பதாக சவால் விடுகிறார்.

இதையடுத்து அவரது நண்பர் பழனிச்சாமியின் சிபாரிசில் அவருக்கு கிடைக்கவிருந்த திருமண சமையல் கான்டிராக்ட்டை ஏற்கிறார். 3 நாட்களுக்கு 5000 பேருக்கு சமைக்கும் இந்த கான்டிராக்ட் அவருக்கு மிகப்பெரிய டாஸ்க் என்பதால் முன்னதாக மறுத்திருந்த நிலையில், தற்போது தன்னுடைய கணவனிடம் போட்ட சவாலுக்காக, இந்த கான்டிராக்டை ஏற்பதாக பழனிச்சாமியிடம் கூறுகிறார் பாக்கியா. இதை கேட்கும் அவரது மாமனார் மற்றும் மாமியார் வருத்தப்படுவதாக இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X