Baakiyalakshmi: கோலாகலமாக நடந்த ஜெனி வளைகாப்பு.. கண்ணீரில் முடிந்த விழா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். குறைவான கேரக்டர்களில் நிறைவான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
தொடர்ந்து சேனலின் முதலிடத்தில் இருந்த தொடர், தற்போது இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது கேன்டீன் பிரச்சினை, கோபியின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள், ஜெனி வளைகாப்பு, செழியன் -மாலினி நட்பு என தொடர் களைகட்டி வருகிறது.
கோலாகலமாக நடந்த ஜெனி வளைகாப்பு: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாக தன்னுடைய முதலிடத்தில் இருந்து பின்தங்கி, இரண்டாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து கல்லூரியில் பாக்கியா சேர்ந்ததை ஒட்டி அடுத்தடுத்த சலிப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ஒளிபரப்பி வந்தது இந்த பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கல்லூரி, கேன்டீன், சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அடுத்தடுத்து தன்னை பிசியாக்கிக் கொண்ட பாக்கியலட்சுமி, கேன்டீனில் சொதப்ப, அந்த கான்டிராக்ட் கைநழுவும் சூழல் ஏற்படுகிறது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தும் ராதிகா, பாக்கியாவை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற காய் நகர்த்துகிறார்.
ஆனால் பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, நிறுவன முதலாளியிடம் தன்னுடைய இக்கட்டான சூழலை சொல்லி, இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்கிறார் பாக்கியா. இதனால் ராதிகா மட்டுமில்லாமல் கோபியும் கடுப்பாகிறார். தன்னுடைய மனைவியின் தொடர் முன்னேற்றம் அவருக்கு பிடிக்காத நிலையில், அவர் கேன்டீனில் இருந்து வெளியேறுவார் என்ற கோபியின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.
இதனிடையே தற்போது ஜெனியின் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அவரை மிஸ் செய்வதாக கூறும் செழியன், பதிலுக்கு ஜெனி எந்த பீலிங்கையும் காட்டாத நிலையில், மாலினியிடம் அதிக நெருக்கம் காட்டுகிறார். இதனிடையே ஜெனியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பழனிச்சாமி, அவரது அம்மா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
மேலும் அழையா விருந்தாளியாக கோபி, ராதிகாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர். இதையடுத்து மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களையும் இந்த ப்ரமோ காட்டியுள்ளது. பாக்கியா, ஈஸ்வரி மட்டுமில்லாமல் தன்னுடைய மனைவியை பிரியும் செழியனும் கண்ணீரை வெளிப்படுத்துகிறார். ஜெனியும் குடும்பத்தினரை பிரிய மனமில்லாமல் தன்னுடைய அம்மாவுடன் புறப்பட்டு செல்கிறார்.


Click it and Unblock the Notifications











