Baakiyalakshmi: பாக்கியாவிற்கு ஐ லவ் யூ சொல்லும் பழனிச்சாமி.. அதிர்ச்சியில் கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களால் கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.

இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் ரசிகர்களை மிகச் சிறப்பாக என்டர்டெயின் செய்துவருகிறார். சமூகவலைதளங்களிலும் அவர் கோபி கேரக்டருக்காக அதிகமான வரவேற்பை பெற்று வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes everyone shocking including Gopi 02-08-2023

பாக்கியாவிற்கு ஐ லவ் யூ சொல்லும் பழனிச்சாமி: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சேனலின் முதலிடத்தில் மாஸ் காட்டி வருகிறது. பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களில் ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த தொடர், தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தனக்கு கிடைக்காத சிறப்பான வாழ்க்கையை பெறுவதாக நினைத்துக் கொண்டு, தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி.

இரண்டாவது திருமணம் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் குழப்பங்கள், முதல் குடும்பத்தையும் தன்னுடைய குழந்தைகள், பெற்றோர் என அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாமல் திண்டாடும் கேரக்டரை கோபி கேரக்டர் மூலம் மிகவும் சிறப்பாக செய்து ரசிகர்களின் பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறார் கோபி. சில மாதங்களுக்கு முன்பு இவர் தொடரிலிருந்து விலகவுள்ளதாக எழுந்த தகவல்களால் ரசிகர்கள் அதிகமான ஏமாற்றத்தை தெரிவித்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் சதீஷ்.

தொடர்ந்து தன்னுடைய மனைவியின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாமல் பொறாமையால் தவிக்கும் கோபி, தன்னுடைய மனைவி கல்லூரியில் இணைந்து படிப்பதையும் பொறுக்க முடியாமல் தொடர்ந்து தன்னுடைய மனைவி ராதிகாவிடம் புலம்புகிறார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார். ஆனால் அவரது எண்ணம் ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்று எண்ணும்படியாக தன்னுடைய முன்னேற்றத்தின் பாதையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாத மனநிலையை தொடர்ந்து பாக்கியா வெளிப்படுத்தி வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes everyone shocking including Gopi 02-08-2023

இதனிடையே கல்லூரியில் இணைந்து படிக்கவுள்ள பாக்கியாவின் முயற்சியை தடுக்கும் வகையில் அவரை அவரது ஆங்கில வகுப்பிற்கே சென்று சந்திக்க முற்படுகிறார் கோபி. அங்கு அவர் பார்க்கும் காட்சி அவருக்கு நெஞ்சு வலியையே ஏற்படுத்துகிறது. இது தொடர்பான புதிய ப்ரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பாக்கியாவை ஆங்கில வகுப்பு படிக்கும் இன்ஸ்ட்டியூட்டிற்கு சென்று சந்திக்க முற்படுகிறார் கோபி.

பாக்கியா கல்லூரியில் இணைந்து படிப்பது குறித்து கேள்வி எழுப்புவதற்காக அவர் சென்ற நிலையில், அங்கு பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரின் நட்பை கோபி சந்தேகத்துடன் பார்த்து வருகிறார். இந்நிலையில், ஆங்கில வகுப்பில், முதல் நாளிலிருந்து பாக்கியாவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவரது சிரிப்பு மிகவும் அழகாக இருப்பதாகவும் பழனிச்சாமி ஆங்கிலத்தில் கூறுகிறார். மேலும் பாக்கியாவிடம் ஐ லவ் யூ என்றும் கூறுகிறார்.

இதைப் பார்க்கும் கோபி அதிர்ச்சியில் உறைகிறார். அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்வதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. பழனிச்சாமியின் இந்த பேச்சு பாக்கியாவிற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பான நிகழ்வாகவே இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சின்போது பழனிச்சாமி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X