Baakiyalakshmi: பாக்கியலட்சுமி இல்லமாக மாறிய வீடு.. முடிந்தது ரிஜிஸ்ட்ரேஷன்!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த ப்ரமோக்கள், எபிசோட்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை கொடுத்து வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் வீடு பாக்கியலட்சுமி பெயரில் ரிஜிஸ்டர் ஆவது குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

தன்னை தன்னுடைய குடும்பத்தின் முன்பு பாக்கியா வில்லனாக மாற்றியுள்ளதாக வழக்கம் போல கோபி, தண்ணி அடித்து புலம்புகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans happy

பாக்கியலட்சுமி இல்லமாக மாறிய கோபியின் வீடு: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சீரியல் சேனலின் முன்னணி தொடராக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்கள், காட்சிகள், கதைக்களங்கள் என ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், சேனலின் டிஆர்பியிலும் சேனல் முன்னிலை வகித்து வருகிறது. அர்பன் கேட்டகரியிலும் தொடர்ந்து சன் டிவி உள்ளிட்ட மற்ற சேனல்களை பின்னுக்கு தள்ளி அதிரடியாக முதல் இடத்தை பிடித்து வருகிறது.

இந்நிலையில் வீடு தொடர்பான பிரச்சினையை கதைக்களமாக கொண்டு, கடந்த சில வாரங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபியிடம் விட்ட சவாலுக்காக, வீட்டை அவரிடம் இருந்து மீட்க 18 லட்சம் ரூபாயை ஒரே மாதத்தில் தருவதற்காக, அல்லாடுகிறார் பாக்கியா. பெரிய அளவிலான சமையல் கான்டிராக்ட் மற்றும் தன்னுடைய மகன்கள் கைக்கொடுத்த நிலையில், கோபியிடம் பணத்தை கொடுத்து செட்டில் செய்கிறார்.

தன்மானம்தான் அனைத்தையுடம் விட முக்கியம் என ராதிகாவிடம் பேசும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா வீட்டைவிட்டு செல்லுமாறு கூறுகிறார். ஒருகட்டத்தில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் கோபியின் சுயநலமான போக்கை சுட்டிக்காட்ட, ராதிகா மற்றும் கோபி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இந்நிலையில் தன்னை பாக்கியா அவமானப்படுத்தி விட்டதாகவும் தன்னுடைய குடும்பத்தினர் முன்பு தன்னை வில்லனாக்கிவிட்டு, அவர்களிடம் தான் மட்டும் நல்ல பெயர் வாங்கியுள்ளதாகவும் கோபி ஆத்திரப்படுகிறார்.

தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட்டுடன் வலம்வரும் பாக்கியாவை, அவர்கள் முன்பு கெட்டவளாக காண்பித்து, அவர்களிடம் இருந்து பாக்கியாவை பிரிப்பேன் என்று சவால் விடுகிறார் கோபி. மேலும் தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் நண்பன் செந்தில் ஆகியோரிடமும் இதையே கூறி வன்மமாக பேசுகிறார். இதனிடையே கோபியின் அப்பா ராமமூர்த்தி முன்னதாக கூறியபடி வீட்டின் ரிஜிஸ்ட்ரேஷன் பிராசஸ் நடக்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans happy

வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் விரும்பும்படி பாக்கியா பெயரில் வீடு ரிஜிஸ்டர் செய்யப்படுகிறது. எந்தவிதமான குளறுபடியும் செய்யாமல் வீட்டை ரிஜிஸ்டர் செய்துக் கொடுக்கிறார் கோபி. இதையடுத்து அவர்கள் அனைவரும் வெளியில் வர, அந்த வீட்டிற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று அவரது மகன் எழில் கூறுவது, கோபியை கடுப்படிக்கிறது. இதையடுத்து கோபியும் ராதிகாவும் வீட்டிற்கு வர, தன்னுடைய வீட்டின் முன்பு பாக்கியலட்சுமி இல்லம் என்று போர்ட் வைக்கப்பட்டுள்ளதை பார்க்கிறார் கோபி.

தன்னுடைய வீட்டில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்தார் கோபி. தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றி, பாக்கியாவை விவாகரத்து செய்ததுடன், இரண்டாவதாக ராதிகாவையும் திருமணம் செய்துக் கொள்கிறார். தான் வாழ மறந்த வாழ்க்கையை வாழ்வதற்காகத்தான் ராதிகாவை அவர் திருமணம் செய்கிறார். ஆனால் அவர் அந்த வாழ்க்கையை பெற்றாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தன்னுடைய அழகான குடும்பம், குழந்தைகளின் அன்பை இழந்து தற்போது ராதிகாவிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் கோபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X