Baakiyalakshmi: படிப்பதற்காக மகளின் கல்லூரியிலேயே சேரும் பாக்கியா.. என்னது.. அதிர்ச்சியில் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் முதலிடத்தில் தொடர்ந்து தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
நிகழ்ச்சியில் தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை முன்வந்து கொடுத்த பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய சிறப்பான கேரியரை நோக்கிய பயணத்தில் முன்னேறிவருகிறார்.
ஆனால் தன்னுடைய தொழிலில் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லாமல் கோபி தன்னுடைய மகளின் கல்லூரி கட்டணத்திற்காக தன்னுடைய நண்பனிடம் கடன் வாங்குகிறார்.

படிப்பதற்காக மகள் இனியாவுடன் கல்லூரியில் இணையும் பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் முதலிடத்தில் தொடர்ந்து பச்சக் என்று பசைபோட்டு ஒட்டிக் கொண்டு வருகிறது பாக்கியலட்சுமி தொடர். தொடர்ந்து அர்பன் கேட்டகரியிலும் முன்னிலை வகித்து வருகிறது. சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளது. குறைவான கேரக்டர்களில் நிறைவான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது.
பெங்காலியில் வெற்றி பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக உருவாகியுள்ள பாக்கியலட்சுமி தொடர், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் பல மாற்றங்களுடன் வெளியாகிவருகிறது. தன்னுடைய கணவனின் மற்றொரு வாழ்க்கை குறித்து அறிந்துக் கொள்ளும் பாக்கியா, தன்னை ஏமாற்றி அவர் பெற நினைத்த விவாகரத்தை தானே மனமுவந்து கொடுக்கிறார். மேலும் கோபி, வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகிறார்.
தொடர்ந்து ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, அவருக்காக, பாக்கியா மற்றும் குடும்பத்தினரை பல விஷயங்களில் அதிருப்திக்குள்ளாக்குகிறார். ஆனால் சில விஷயங்களில் வாயைக் கொடுத்து ராதிகாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல அவரது வாழ்க்கை நிலை மோசமாக மாறுகிறது. இதனால் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, தன்னுடைய பிசினசிலும் கவனம் செலுத்த முடியாமல் அவரது வாழ்க்கைப்பாதை மாறுகிறது.
இந்நிலையில் ஒருபக்கம் பாக்கியா, தன்னுடைய தொழிலில் தொடர்ந்து முன்னேறுகிறார். பிரம்மாண்டமான சமையல் கான்டிராக்ட்களை எடுத்து சாதித்து காட்டுகிறார். கேன்டீன் கான்டிராக்டிலும் சாதிக்கிறார். தொடர்ந்து ஆங்கிலம் தெரியாது என்ற நிலையில், ஆங்கில வகுப்பிற்கும் போய், இனியாவின் கல்லூரி முதல்வரிடம் வெளுத்து வாங்குகிறார். கோபியிடம் 18 லட்சம் ரூபாயை தன்னுடைய மகன்களின் உதவியுடன் கொடுத்து, வீட்டையும் தன் பெயரில் மாற்றிக் கொள்கிறார்.

மற்றொரு பக்கம் ராதிகாவும் தன்னுடைய அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை பெறுகிறார். ஆனால் கோபி நிலைதான் மோசமாக மாறுகிறது. தன்னுடைய மகள் இனியாவின் கல்லூரி கட்டணத்திற்காக தன்னுடைய நண்பனிடம் கடன் பெறும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். ஆனால் முன்னதாகவே சீட்டு போட்டு, அந்தப் பணத்தை தன்னுடைய மகளின் கல்விக்காக கட்டணமாக செலுத்துகிறார் பாக்கியா.
இதனிடையே இனியாவின் கல்லூரியை பார்க்கும் பாக்கியாவிற்கு, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆசை துளிர்விடுகிறது. இதற்கேற்றாற்போல அவருக்கு என்ன தெரியும் என்று கோபியும் ஒரு சமயத்தில் அவமானப்படுத்துகிறார். டிகிரி இல்லாத காரணத்தால் அவரது லோன் பிராசஸ் நிராகரிக்கப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய மகன் எழிலின் உதவியுடன் தன்னுடைய மகள் இனியாவின் கல்லூரியிலேயே சேர்கிறார் பாக்கியா. இதை இனியா மூலம் அறியும் கோபி, அதிர்ச்சியில் உறைவதாக இந்தவார ப்ரமோ காரணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











