Baakiyalakshmi: கண்ணீர்விட்டு கதறிய பாக்கியா.. ஆறுதல் கூறிய பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த கட்டங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் தொடரில் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கிற்காக சமையல் கேட்டரிங் செய்ய பாக்கியாவிற்கு ராதிகா உத்தரவிடுகிறார். இதையொட்டி தன்னுடைய கல்லூரிக்குக்கூட போகாமல் பாக்கியா அதை எதிர்கொள்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans sad on Baakiya

பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரமோவால் ரசிகர்கள் வருத்தம்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து மாஸ் காட்டி வந்தாலும் சில தினங்கள் அதிரடியான எந்தவிதமான எபிசோட்களும் இல்லாததால் டிஆர்பியில் சில புள்ளிகள் கீழிறங்கியுள்ளது. அந்த இடத்தை பச்சக் என்று பற்றிக் கொண்டது சிறகடிக்க ஆசை. தற்போது சேனலின் Urban மற்றும் Urban +Rural கேட்டகரியில் சிறகடிக்க ஆசை சீரியல்தான் முன்னணியில் உள்ளது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடரில் தற்போது மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. பாக்கியாவின் கல்லூரி சேர்க்கையையொட்டி கடுப்பாகும் கோபி, தன்னுடைய அம்மாவிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். ஈஸ்வரி பாக்கியாவால்தான் தங்களின் குடும்பம் நாலு பேர் முன்னிலையில் சிறப்பாக உள்ளதாகவும், கோபியால் குடும்பம் அவமானப்பட்டதாகவும் கூறி மொக்கை கொடுக்கிறார். இதனால் ஆத்திரப்படும் கோபி, பாக்கியாவின் கல்லூரி சேர்க்கை குறித்து மகள் இனியாவிடம் ஏற்றி விடுகிறார்.

இதை கேட்கும் இனியாவும் தன்னுடைய அம்மாவிடம் கல்லூரியில் இருந்து விலக கோருகிறார். ஆனால் தன்னுடைய நியாயமான ஆசையால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை இனியாவிற்கு பாக்கியா புரிய வைக்கிறார். இந்நிலையில் தான் கேன்டீன் கான்டிராக்ட் எடுத்துள்ள அலுவலகத்தின் முக்கியமான மீட்டிங் ஒன்றில் சமையல் செய்ய பாக்கியாவிற்கு உத்தரவிடப்படுகிறது. இதை ராதிகாதான் கொடுக்கிறார்.

ராதிகா ஏற்கனவே தன்மீது கடுப்பில் உள்ளதால், இந்த சமையல் கான்டிராக்டை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது பாக்கியாவிற்கு கட்டாயமாகிறது. இதையொட்டி அவர் தன்னுடைய கல்லூரிக்கும் போகாமல் கேன்டீனுக்கு வருகிறார். ஆனால் சமையலில் சொதப்பல் ஏற்படுகிறது. இதனால் தனக்குகீழ் சமையல் செய்யும் அனைவரிடமும் பாக்கியா கதறி அழுகிறார். இது தன்னுடைய பிசினஸ் மட்டுமில்லை என்று அவர் கூறுகிறார். இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.]

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans sad on Baakiya

அந்த நேரத்தில் அங்கே வரும் பழனிச்சாமி மற்றும் லோபிகாவிடமும் அவர் அழுகையினூடே பேசுகிறார். தன்னை அவமானப்படுத்திய அனைவர் முன்னிலையிலும் தான் தற்போது தலை நிமிர்ந்து வாழ்வதற்கு இந்த பிசினஸ்தான் காரணம் என்றும் கூறுகிறார். இந்த பிசினசில் நாம் சொதப்பினாலும் முன்னுக்குவர நினைக்கும் அனைத்து பெண்களையும் இப்படித்தான் சொதப்புவீர்கள் என்று கீழே தள்ளுவார்கள் என்றும் கூறுகிறார்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது என்றும், நம்மை தப்பு என்று சொல்பவர்கள் முன்னிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து சமையலில் ஏற்பட்ட பிரச்சினையை பாக்கியா சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அவருக்கு ஆறுதல் கூறும்வகையில் பழனிச்சாமியும் லோபிகாவும் அங்கே உளளதாக ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X