Baakiyalakshmi serial: தாலியுடன் கணேஷ்.. மணப்பெண்ணாக அமிர்தா.. தேடி அலையும் எழில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் கெத்து காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது. தன்னுடைய முன்னாள் மனைவி அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை கத்தி முனையில் கடத்தும் கணேஷ் அவர்கள் இருவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். ஏமாற்றி அவர் அமிர்தா மற்றும் நிலாவை கடத்திய சூழலில் பாக்யா மற்றும் குடும்பத்தினர் பரிதவிப்புடன் அமிர்தாவை தேடி வருகின்றனர். எழில் மற்றும் செழியன் இருவரும் வீதி வீதியாக சென்று அமிர்தா மற்றும் குழந்தையை தேடி வரும் சூழலில் அவர்களுக்கு உதவ முன் வருகிறார் பழனிச்சாமி.
இந்நிலையில் அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் கணேஷ். இதுகுறித்து அமிர்தாவிடம் கணேஷ் கூறிய நிலையில் அவர் ஆத்திரத்துடன் மறுக்கிறார். ஆனால் அமிர்தா இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எழிலை கொலை செய்து விடுவேன் என்று கணேஷ் மிரட்டுகிறார். இதனிடையே இந்தத் தொடரின் பரபரப்பான காட்சிகளை வெளிப்படுத்தும்வகையில் தற்போது புதிய பிரமோ வெளியாகியுள்ளது. அதில் மாப்பிள்ளை கோலத்தில் கணேஷ், அமிர்தாவை அடித்து மிரட்டுவதாக காட்டப்பட்டுள்ளது. இதனிடையே அமிர்தாவை எழிலும் பரபரப்பாக தேடி வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சேனலில் அதிகமான டிஆர்பி புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் உள்ள நிலையில் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடுகளை கொடுத்து வந்த இந்த சீரியல், தற்போது அடுத்தடுத்த மிரட்டலான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தன்னுடைய முன்னாள் மனைவி அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை கத்தி முனையில் கடத்தி அவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார் கணேஷ்.
அமிர்தா, குழந்தை கடத்தல்: முன்னதாக தன்னுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் சாகக்கிடப்பதாகவும் கூறி பாக்யாவை ஏமாற்றி அமிர்தா மற்றும் நிலாவை தன்னுடைய வீட்டிற்கு வரவழைக்கிறார். அங்கு வைத்து அவர்களை கடத்துகிறார். இதனால் செய்வதறியாமல் பாக்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அமிர்தா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர். அந்த வகையில் எழில் மற்றும் செழியனும் வீதி வீதியாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களுக்கு உதவும் உதவ முன் வருகிறார் பழனிச்சாமி. கடத்திய காரின் நம்பர் பதற்றத்தில் மறந்து விட்டதாக பாக்கியா கூறிய நிலையில் தற்போது அவருக்கு அந்த நம்பர் ஞாபகத்திற்கு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

அமிர்தாவை மிரட்டும் கணேஷ்: இதனிடையே அமிர்தா மற்றும் நிலாவை கடத்திய கணேஷ், அவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். அங்கு தான் அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாகவும் எழில் கட்டிய தாலியை கழற்றி வீசும் படியும் அவர் மிரட்டுகிறார். ஆனால் அவரின் மிரட்டலுக்கு அமிர்தா பணியாத நிலையில் அவர் இணங்கவில்லை என்றால் எழிலை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அமிர்தா கணேசன் மிரட்டலுக்கு பணிகிறார். இதனிடையே தற்போது சீரியலின் புதிய பிரமோ வெளியாகி உள்ளது. அதில் மாப்பிள்ளை கோலத்தில் கணேஷ் கையில் தாலியுடன் நிற்பதாக காட்டப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி புதிய பிரமோ: அமிர்தா அவரது மிரட்டலுக்கு பணிந்து மணப்பெண் கோலத்தில் நிற்பதாகவும் காட்டப்பட்டுள்ளது ஆனாலும் திருமணத்திற்கு அவர் சம்மதிக்காத நிலையில் அவரை அடித்து மீண்டும் கணேஷ் மிரட்டுவதாகவும் காட்டப்பட்டுள்ளது இதனால் அடுத்தடுத்து எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் முன்னதாக மிகுந்த பிரச்சினைகளுக்கிடையில் நடந்த நிலையில், தற்போது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக நுழைந்துள்ளார் கணேஷ்.


Click it and Unblock the Notifications











