Baakiyalakshmi: எழிலின் வாழ்க்கையை மீட்க போராடும் பாக்கியா.. கணேஷை நேரில் சந்தித்து கோரிக்கை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்த சீரியலில் கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில், தனிப்பட்ட பெண்ணாக தன்னுடைய மகன்கள் மற்றும் மாமனார், மாமியாரையும் காப்பாற்றும் கேரக்டரில் பாக்கியாவாக சுசித்ரா நடித்துள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone thrilling

மேலும் இந்தத் தொடரின் கோபி, ராதிகா உள்ளிட்ட லீட் கேரக்டர்களும் தொடரின் சுவாரஸ்யங்களை கூட்டும்வகையில் நடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கணவனை விவாகரத்து செய்த பாக்கியலட்சுமி சந்திக்கும் போராட்டங்களை மையமாக கொண்டு தற்போது அடுத்தடுத்த கதைக்களங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாக்கியாவின் மகன்கள் எழில் மற்றும் செழியன் இருவரின் வாழ்க்கையிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றிலிருந்து அவர்களை பாக்கியா எப்படி மீட்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone thrilling

பாக்கியா வீட்டில் கோபி: இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரையும் ஈஸ்வரி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துவந்து தங்க வைக்க, அவருடன் பேச முடியாததால், ராதிகாவும் தற்போது பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் முன்னதாக இவர்கள் இருவரும் அந்த வீட்டிற்கு இருந்து பாக்கியாவிற்கு கொடுத்த குடைச்சல் தற்போது மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone thrilling

கணேஷால் வந்த பிரச்சினை: இதனிடையே எழிலின் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ், தற்போது உயிருடன் திரும்பியுள்ளார். தன்னுடைய மனைவி அமிர்தா மற்றும் மகள் நிலா இல்லாமல் தான் ஊர் திரும்ப மாட்டேன் என்று அவர் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அவரது பெற்றோர் முழித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் பாக்கியாவிடமும் பேசிய நிலையில், இந்த விவகாரத்தில் பாக்கியா என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone thrilling

கணேஷை சந்திக்கும் பாக்கியா: இதனிடையே தற்போது கணேஷை நேரில் சந்தித்து எழில் -அமிர்தா வாழ்க்கை நல்லமுறையில் சென்றுக் கொண்டிருப்பதால் அதில் இடையில் நுழைந்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று பாக்கியா கேட்கிறார். ஆனால் சட்டப்பூர்வமாக அமிர்தா தன்னுடைய மனைவி என்றும் நிலா தன்னடைய மகள் என்றும் கூறும் கணேஷ், அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார். இதனால் குழப்பமடையும் பாக்கியா இதுகுறித்து வீட்டில் பேச தனக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுக்கும்படி கேட்பதாக தற்போது ப்ரமோ வெளியாகியுள்ளது.

பாக்கியாவிற்கு தெரியவரும் செழியன் குறித்த உண்மை: இதனிடையே கோயிலில் வைத்து மாலினி மற்றும் செழியனை பார்க்கும் பாக்கியா, இதுகுறித்து செழியனிடம் விசாரிக்கிறார். முன்னதாக செழியன் இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வதாக மாலினி வீட்டிற்கு போக அங்கும் சென்று பாக்கியா விசாரிக்கிறார். இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்பது தெரியவருகிறது. இதையடுத்து கோயிலில் செழியனிடம் இதுகுறித்து விசாரிக்க, மாலினி தன்னை மிரட்டுவதாக தன்னுடைய அம்மாவிடம் பரிதவிப்புடன் செழியன் கூறுவதாகவும் இந்த வார ப்ரமோவில் அமைந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரின் வாழ்க்கையில் எந்தமாதிரியான நடவடிக்கையை பாக்கியா மேற்கொள்வார் என்று இனிவரும் எபிசோட்களில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X