Baakiyalakshmi: பழனிச்சாமி -பாக்கியா உறவை மீண்டும் கொச்சைப்படுத்திய கோபி.. ஆத்திரத்தில் பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.
தன்னுடைய மற்றும் தன்னுடைய மகன்களின் வாழ்க்கை சிக்கல்களை விடுவிக்கும் முயற்சியில் பாக்கியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்த தன்னுடைய வேலைகளை இழந்த பாக்கியாவிற்கு கவர்மெண்ட் பொருட்காட்சி கான்டிராக்ட் கைக்கொடுத்த நிலையில், மழையால் அவரது கனவு தற்காலிகமாக தகர்ந்துள்ளது.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தொடர், பெங்காலியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமோயி என்ற தொடரிலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப இந்தத் தொடர் சிறப்பான கதைக்களத்தையும் காட்சி அமைப்புகளையும் கொண்டுள்ளது. இந்த தொடரில் கேரக்டர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் மிகச்சிறப்பாக பொருந்தியுள்ளனர்.
சிறப்பான கேரக்டர்கள்: கோபி, பாக்கியா, ராதிகா என அடுத்தடுத்த லீட் கேரக்டர்களாக இருந்தாலும் துணை கதாபாத்திரங்களாக இருந்தாலும் இந்தத் தொடரின் கேரக்டர்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தொடர், சேனலின் லீட் தொடராக பல மாதங்கள் இருந்தது. ஆனால் தற்போது முதலிடத்தை சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் பிடித்துக் கொண்ட நிலையில் தற்போது முதலிடத்திற்காக பாக்கியலட்சுமி தொடர் முட்டி மோதி வருகிறது.
மழை செய்யும் சதி: தற்போது கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் போன்றவை கைநழுவிப் போக, கவர்மெண்ட் பொருட்காட்சி கான்டிராக்டை மிகவும் சிரமப்பட்டு பெற்றுள்ளார். அதற்கான பல விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து பொருட்களையும் ஏற்றி பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் மழை சதி செய்கிறது. கடுமையான மழையால் பொருட்காட்சி நடக்குமா என்ற தவிப்பில் தற்போது பாக்கியா மட்டுமில்லாமல் குடும்பத்தினரும் உள்ளனர்.
பாக்கியாவை மட்டம் தட்டும் கோபி: இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாக்கியாவை மட்டம் தட்டும் வேலையில் கோபி ஈடுபடுகிறார். அவருடன் இதில் ஈஸ்வரியும் இணைந்துக் கொள்கிறார். யார் சொன்னதையும் கேட்காமல் பாக்கியா, இந்த பொருட்காட்சி கான்டிராக்டை ஏற்றுக் கொண்டதாகவும் தற்போது ஒரு லட்சத்து 60 அயிரம் ரூபாயை இழந்துவிட்டு நிற்பதாகவும் ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார். இவர்களை ராதிகாவும் ராமமூர்த்தியும் கண்டிக்கின்றனர்.
பழனிச்சாமி -பாக்கியாவை கொச்சைப்படுத்தும் கோபி: இந்நிலையில் பாக்கியாவை வீட்டில் வந்து சந்திக்கும் பழனிச்சாமி, இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்பிக்கை அளிக்கிறார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழல் காணப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி, அவர்கள் இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தும்வகையில் பேசுகிறார். இயல்பாக பேச முற்படும் பழனிச்சாமியையும் அசிங்கமாக பேசுகிறார். இதனால் அவரின் முகம் மாறுகிறது. இதையடுத்து கோபியிடம் பாக்கியாவும் ஆத்திரத்துடன் பேசுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











