Baakiyalakshmi: நீயெல்லாம் ஒரு அம்மாவா.. கோபி கேட்ட கேள்வி.. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரெண்ட் பக்கத்திலேயே பழனிச்சாமி தன்னுடைய கபேவை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவிற்காக பாக்கியா புதுவிதமான இனிப்பை தயாரித்து அனைவருக்கும் பரிமாறுகிறார்.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் சிறப்பு எபிசோட் இதே நேரத்தில் ஒளிபரப்பானது. இதையடுத்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணி முதல் 5 மணி வரை இந்த சீரியலின் எபிசோட் தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரசிகர்களை கவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு பக்கத்திலேயே பழனிச்சாமி தன்னுடைய கபேவை திறந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் நெருங்கி விட்டதாக பழனிச்சாமியின் அக்கா நேரடியாகவே கூறுகிறார்.
சண்டே ஸ்பெஷல்: தொடர்ந்து அவர்கள் இருவரின் கடைகளும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து பேசியதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடின் பிரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இனியாவின் பிறந்த நாளையொட்டி பழனிச்சாமி மற்றும் அவரது அம்மா, அக்கா ஆகியோர் பாக்கியா வீட்டிற்கு வருவதாக காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இனியாவிற்கு கேக் ஊட்டி விடுமாறு ராமமூர்த்தி பழனிச்சாமியிடம் கூறுவதாகவும் அவரும் அப்படியே செய்வதாகவும் காணப்படுகிறது.
அதிர்ச்சியில் கோபி: இந்நிலையில் முன்னதாக கோபி உள்ளே வரும் நிலையில், அங்கு பழனிச்சாமியின் அம்மாவும் அக்காவும் பேசுவதை கேட்கிறார். அவர்கள் இருவரும் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை எடுத்து வராமல் விட்டு விட்டதை குறித்து பேசுவதாக காணப்படுகிறது. தொடர்ந்து கோபி இதுகுறித்து கேட்கும் சூழலில் பாக்கியாவை பழனிச்சாமிக்கு பெண் கேட்க உள்ளதாக அவர்கள் இருவரும் கூறுகின்றனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு கோபி உள்ளாகிறார். இதையடுத்து அவர் பாக்கியாவிடம் சென்று உனக்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் முடிக்க போகிறார்களாம் என்று கூறி நீ எல்லாம் ஒரு அம்மாவா என்றும் கேள்வி எழுப்புகிறார்.
ஆத்திரத்தில் பாக்கியா: இதை அதிர்ச்சியுடன் கேட்கும் பாக்கியா தொடர்ந்து வாயை மூடுங்கள் என்று கோபியை பார்த்து கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. நீண்ட நாட்களாகவே பழனிச்சாமி பாக்கியாவை திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால் பாக்கியாவுக்கு அதுபோன்ற எந்த எண்ணமும் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் கோபி கூறிய இந்த விஷயம், பாக்கியாவிற்கு மிகுந்த அதிர்ச்சியை தருவதாக இந்த ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பாக்கியா என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பது குறித்து வரும் ஞாயிறு எபிசோடில் காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











