Baakiyalakshmi: பாக்கியாவை பார்த்ததும் பழனிச்சாமி மண்டைக்குள் எரிந்த லைட்.. இந்த வார ப்ரமோ இதோ!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைப்போட்டு வரும் பாக்கியலட்சுமி தொடர் 1100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களை சுற்றிய சொந்தங்களையும் கேரக்டர்களாக கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை இயக்குனர் கொடுத்து வருகிறார்.
இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற்றாலும் பாக்கியலட்சுமி, தனக்கு தெரிந்த சமையலை மூலதனமாக கொண்டு மசாலா பிசினஸ், கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட் என படிப்படியாக முன்னேறி தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கி சாதித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கான அடுத்தடுத்த விஷயங்களாக எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கடந்த சில வாரங்களில் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து ஆயிரம் எபிசோட்களை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக இந்த தொடர், தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. விரைவில் இந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் இருந்த அடுத்தடுத்த பிரச்சினைகளை பழனிச்சாமியின் உதவியுடன் பாக்கியா தீர்த்து வைத்துள்ளார். கணேஷ் மற்றும் மாலினி விவகாரங்களை எதிர்கொண்டு எழில் மற்றும் செழியன் இருவரும் தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
பாக்கியாவின் அடுத்தடுத்த பாதை: தற்போது இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சீரியல் இயக்குனர் புகுத்தி வருகிறார். தன்னுடைய ரெஸ்டாரெண்ட்டிற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வராத சூழலில் அதற்கான பார்க்கிங் பிரச்சினையையும் பழனிச்சாமி உதவியுடன் தீர்த்து வைத்துள்ளார் பாக்கியா. இதனிடையே, பழனிச்சாமியின் 45வது பிறந்த நாளை அவரது அம்மா விமரிசையாக கொண்டாட திட்டமிடுகிறார். அதற்கு பாக்கியா சமையல் கான்டிராக்ட் எடுக்கிறார். பழனிச்சாமி தனக்கு நண்பராக அறிமுகம் ஆனதிலிருந்து பல உதவிகளை தனக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் நிமித்தமாகவும் செய்துள்ளதை நினைத்துப் பார்க்கும் பாக்கியா, அதையொட்டி அவரது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல திட்டமிடுகிறார்.
பழனிச்சாமி பிறந்தநாள்: அதற்காக வித்தியாசமான பல உணவுகளையும் அவர் தன்னுடைய மெனுவில் சேர்க்கிறார். இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகி உள்ளது. அதில் பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி அவரது உறவினர்கள் அனைவரும் வந்த சூழலில் அவருடைய அக்கா மகன், மாமா நீங்கள் எப்போது தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்பதாக காணப்படுகிறது. அதற்கு நீயும் ஆரம்பித்து விட்டாயா என்று கேட்கும் பழனிச்சாமி. தொடர்ந்து தான் கூறாமலேயே தன்னுடைய தேவைகளை புரிந்து கொள்ளும் பெண் தனக்கு வேண்டும் என்று கூறுகிறார்.

பழனிச்சாமியின் விருப்பம்: இதையடுத்து அங்கே வரும் பாக்கியா பழனிச்சாமிக்கு தான் வித்தியாசமாக ட்ரை செய்த இனிப்பை கொடுக்கிறார். இதையடுத்து அவருக்கு அவரது வாழ்க்கையில் பாக்கியா குறித்த வித்தியாசமான பெல் அடிப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மாவை சிறப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமி கூறுகிறார். அங்கே பாக்கியா பழனிச்சாமியின் அம்மாவை கைத்தாங்கலாக அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து தன்னுடைய சகோதரிகளை கூட பிறந்தவர்களாக நினைக்க வேண்டும் என்றும் கூற உடனே அவர் பாக்கியாவை பார்க்க அங்கே அவர் பழனிச்சாமியின் சகோதரிகளிடம் மிகவும் அன்னியோன்யமாக பழகுவதை பார்க்க முடிகிறது.
பழனிச்சாமி மண்டைக்குள் லைட்: தொடர்ந்து பேசும் பழனிச்சாமி, அந்தப் பெண்ணை பார்க்கும்போது தன்னுடைய மண்டைக்குள் லைட் எரிய வேண்டும் என்று கூறுகிறார். உடனே பாக்கியாவை பார்க்கும் அவரது மண்டைக்குள் லைட் எரிவதாக காட்டப்படுகிறது. நெருங்கிய தோழி என்று தொடர்ந்து கூறி வந்த பழனிச்சாமி. தற்போது பாக்கியாவை மாற்றுக் கோணத்தில் பார்க்க துவங்கியுள்ளார். செல்வி. எழில் உள்ளிட்டவர்களும் பாக்கியாவை பழனிச்சாமியுடன் இணைத்து முன்னதாக பேசிய சூழலில் அடுத்ததாக பாக்கியா மட்டுமே கிரீன் சிக்னல் காட்டவேண்டிய சூழலில் உள்ளார் இதனிடையே பாக்கியா மற்றும் பழனிச்சாமி உறவை ஆரம்பத்தில் இருந்தே கோபி கொச்சைப்படுத்திய சூழலில் இவர்கள் இருவரும் இணைந்தால் அவர் என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுப்பார் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











