Baakiyalakshmi serial: எனக்கு தெரியாது போங்க சார்.. ரகசியம் கேட்ட கோபி.. அலட்சியப்படுத்திய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகி பரபரப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. காலையில் ஈஸ்வரியுடன் வாக்கிங் செல்லும் கோபி, காலையிலேயே ரெஸ்டாரெண்ட் புறப்பட்டு செல்லும் பாக்கியாவை வழியில் பார்க்கிறார். இதையடுத்து வீட்டு வேலைகளை யார் செய்வார்கள் என்று ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்புகிறார்.
பாக்கியா தான் வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு ரெஸ்டாரெண்டிற்கும் காலையிலேயே செல்வதாக ஈஸ்வரி கூறுவதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. இப்படி அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்யும் பாக்கியாவிடம் இதுகுறித்து கோபி கேள்வி எழுப்புவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன. சரியாக சாப்பிடாததால் ஈஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஈஸ்வரியை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுவிடலாம் என்று ராமமூர்த்தி கூறுவதாகவும் ஆனால் தன்னுடைய அம்மாவை தன்னுடன் வைத்து தான் பார்த்துக் கொள்வேன் என்று கோபி கூறுவதாகவும் முன்னதாக வெளியான பிரமோவில் காணப்பட்டது.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள் காணப்படுகின்றன. காலை நேரத்திலேயே தன்னுடைய ரெஸ்டாரெண்டிற்கு பாகியா செல்வதை பார்க்கும் கோபி, தன்னுடைய அம்மாவிடம் இது குறித்து கேட்பதாக இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி, அவள் எப்போதும் இப்படி தான் செய்வார் என்றும் வீட்டு வேலைகளையும் ரெஸ்டாரெண்ட் வேலைகளையும் பாக்கியா சிறப்பாக மேனேஜ் செய்வதாகவும் பாராட்டு தெரிவிக்கிறார். தானும் அதே போல மல்டி டேலண்ட்டடாக இருப்பேன் என்று கோபி தனக்குத்தானே சபதம் செய்கிறார்.

கோபி அதிரடி: தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய வீட்டிலும் கிளவுட் கிச்சனிலும் அவர் அதிரடியாக செயல்படுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து இதனால் அவர் மிகவும் களைப்பாவதாகவும் காணப்படுகிறது. இதனிடையே அடுத்த நாள் பாக்கியாவை வாக்கிங்கின் போது சந்திக்கும் கோபி எப்படி இப்படி ரெஸ்டாரண்டிலும் வீட்டிலும் ஒரே நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்கிறாய் என்று கேட்பதாகவும் அதற்கு நீங்கள் தான் புத்திசாலியாயிற்றே, எனக்குத் தெரியாது போங்க சார் என்று பாக்கியா கூறுவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.
உண்மையை அறிந்த கோபி: எப்போதும் பாக்கியாவை ஸ்டுப்பிட் என்று கூறும் வழக்கமுடையவர் கோபி. இதனால் அவர் 25 ஆண்டுகளை கடந்து தன்னுடைய மனைவி பாக்கியாவுடன் சரிசமமாக தன்னால் இருக்க முடியவில்லை என்று மற்றவர்களிடம் புலம்பியதையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து பாக்கியாவை டைவர்ஸ் செய்து விட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்தார். இந்நிலையில் பாக்கியாவின் அதிகப்படியான டேலண்டை தற்போது அவர் ஒவ்வொன்றாக புரிந்து கொள்வதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காணமுடிகிறது.


Click it and Unblock the Notifications











