Baakiyalakshmi serial: உங்களை சும்மா விடமாட்டேன் கோபிநாத்.. கொதித்த பாக்கியா.. தெரியவந்த உண்மை!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக இருந்துவந்த பாக்கியலட்சுமி தொடர், அடுத்தடுத்து தன்னுடைய முன்னணி பொசிசனை விட்டுக் கொடுத்து நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதையடுத்து பாக்கியலட்சுமி சீரியலை விரைவில் விஜய் டிவி முடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நடைபோட்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். நீண்ட காலங்களாக போராடிவந்த எழிலுக்கு தற்போதுதான் இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல பாக்கியாவை தொடர்ந்து பழிவாங்க துடித்துவரும் கோபி, தன்னுடைய உதவியாளர் ஆனந்த் மூலமாக அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவந்த பாக்கியலட்சுமி சீரியல், தற்போது தன்னுடைய அடுத்தடுத்த நிலையை விட்டு கீழிறங்கி 4வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்த சீரியலில் பாக்கியாவின் போராட்டங்கள், அவரை கீழிறக்க கோபி செய்யும் சதி, அவரது மனநிலையை புரிந்துக் கொண்ட ஈஸ்வரி, இயக்குநராகும் வாய்ப்பை பெற்ற எழில் என அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறியுள்ளன. பாக்கியா முன்னேறிவிடக்கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார் கோபி. அதற்காக தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஆனந்த் என்பவரை பாக்கியாவிடம் வேலைக்கு சேர்த்து கெட்டப்பெயரை பெற்றுத்தந்துள்ளார்.
கதறிய பாக்கியா: எழிலுக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படத்தின் பூஜையில் கலந்துக் கொள்ள மிகுந்த உற்சாகத்துடன் பாக்கியா வருகிறார். ஆனால், அந்த புரொடியூசர் முன்னதாக கோபிக்கு தெரிந்தவராக இருப்பதால் பாக்கியாவை அந்த பூஜையில் பங்கேற்கவிடாமல் செய்கிறார் கோபி. இதனால் எழில் மற்றும் பாக்கியா இருவரும் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகியுள்ளது. இதில் ஆயுதபூஜைக்காக எடுத்த கிஃப்ட் ஆர்டரை பாக்கியா தொடர்ந்து செய்வதாக காட்டப்படுகிறது.

பாக்கியாவிற்கு தெரியவந்த கோபியின் சதி: அவர் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து அவற்றை வண்டிகளில் ஏற்றி அனுப்பும் நிலையில், அங்கிருக்கும் கோபியின் ஆள் ஆனந்திற்கு கோபியிடம் இருந்து போன் வருகிறது. அதை பார்க்கும் பாக்கியா கோபியின் காலை ஸ்பீக்கரில் கேட்கிறார். அவர் மட்டுமில்லாமல் ஈஸ்வரி, செல்வி உள்ளிட்டவர்களும் கேட்கின்றனர். இதையடுத்து பக்ரீத் ஆர்டரில் கெட்டுப்போன சிக்கனை கலந்ததுபோல தற்போதும் ஏதாவது செய்து பாக்கியாவின் ரெஸ்டாரெண்டை மூடும்படி செய்யுமாறு கோபி கூறுகிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பாக்கியா, உடனடியாக கோபியின் வீட்டிற்கு சென்று சத்தம் போடுகிறார்.
இந்த வார பிரமோ: அப்போது உண்மை தெரியாமல் ராதிகா கேள்வி எழுப்ப, பாக்கியா உண்மையை கூறுவதாகவும் காணப்படுகிறது. தொடர்ந்து தான் கோபியை சும்மா விட மாட்டேன் என்று பாக்கியா ஆத்திரத்துடன் கூறுவதாகவும் இந்த வார பிரமோவில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன. உண்மை தெரிந்ததால் கோபியும் முழிப்பதாக இதில் காணப்படுகிறது. உண்மை தெரிநித நிலையில் அடுத்ததாக பாக்கியாவின் மூவ் என்னவாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











