பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி.. கோபியிடம் உதவி கேட்கும் பாக்கியா.. அதிர்ச்சியில் ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோட்களை தாண்டி தொடர்ந்து பயணித்து வருகிறது. இந்த சீரியல் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தாலும் அந்த எண்ணத்தில் சேனல் தரப்பு இல்லை என்றும் சிறப்பான டிஆர்பியை இந்த சீரியல் பெற்று வருவதால் இப்போதைக்கு நிறைவடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சீரியலில் பாக்கியாவை விரோதியாக நினைத்து அடுத்தடுத்து அவரது வளர்ச்சியை குலைக்கும் செயல்களில் கோபி ஈடுபட்டு வந்த நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இருந்தபோது பாக்கியா அவரது உயிரை காப்பாற்றுகிறார். இதையடுத்து பாக்கியா மீது கோபிக்கு சாஃப்ட் கார்னர் ஏற்படுகிறது. இதையொட்டி அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 1300 எபிசோட்களை தாண்டி மாஸ் காட்டி வருகிறது. மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து சேனலின் முதலிடத்தில் வெற்றிநடை போட்டுவந்த இந்த தொடர், ஒரு கட்டத்தில் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது. இதனால் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை புகுத்தி, சீரியலின் இயக்குநர் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தத் தொடரை தற்போது மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார். தொடர்ந்து பாக்கியாவை எதிர்த்து அவரது வளர்சியை குலைத்துவந்த கோபியின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கோபியை காப்பாற்றிய பாக்கியா: ஹார்ட் அட்டாக் வந்து நடுத்தெருவில் உயிருக்கு போராடிய கோபியை பாக்கியாதான் உரிய நேரத்தில் மீட்டு உயிர் பிழைக்க காரணமாக அமைகிறார். இந்நிலையில் பாக்கியாவை பழிவாங்கும் எண்ணம் நீங்கி தற்போது பாக்கியாவை புதிதாக பார்க்கத் துவங்கியுள்ளார் கோபி. முன்பெல்லாம் பாக்கியாவின் குறைகள் மட்டுமே தெரிந்ததாகவும் தற்போது பாக்கியாவின் ஸ்மார்ட்னெஸ் தன்னை அதிகமாக கவர்வதாகவும் தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவிடமே கோபி பாராட்டுவதாக காட்சிகள் காணப்பட்டன. முன்னதாக கோபியை பாக்கியாவுடன் இணைக்க ஈஸ்வரி முனைந்த நிலையில், அதற்கு பிடி கொடுக்காத பாக்கியா, கோபி மற்றும் ராதிகா இருவரும் மீண்டும் இணையவும் காரணமாக அமைந்தார்.
கோபி மீதான வழக்கு வாபஸ்: இந்நிலையில் முன்னதாக ரெஸ்டாரெண்ட் ஆர்டரில் கோபி கெட்டுப் போன கறியை சேர்த்த விவகாரத்தில், அவர்மீது பாக்கியா வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தற்போது கோபியின் உடல்நிலை சரியில்லாதது மற்றும் தன்னுடைய மாமியார், ராதிகா மற்றும் குழந்தைகளின் அடுத்தடுத்த விருப்பங்களுக்கு மதிப்பளித்து இந்த வழக்கை பாக்கியா தற்போது வாபஸ் வாங்கியுள்ளார். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காட்சிகள் காணப்பட்டன. பாக்கியா வழக்கை வாபஸ் வாங்கினாலும் அவரை ஈஸ்வரி திட்டவே செய்கிறார்.
ராதிகா அதிர்ச்சி: தன்னுடைய மகனை இந்த வழக்கின்மூலம் பாக்கியா அலைக்கழித்ததாக அவர் திட்டுவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. இதற்கும் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் பாக்கியா நிற்பதாகவும் காட்டப்படுகிறது. தொடர்ந்து அடுத்ததாக வெளியாகியுள்ள பிரமோவில் தன்னுடைய ரெஸ்ட்டாரெண்டின் ஆர்டருக்காக கோபியின் கிளவுட் கிச்சனில் இருந்து பாக்கியா உதவி கேட்பதாகவும் அவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்வதாகவும் காணப்படுகிறது அடுத்தடுத்து பாக்கியா மற்றும் கோபியின் இந்த செயல்கள் ராதிகாவை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாகவும் இந்த பிரமோக்களில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











