Baakiyalakshmi: பசங்க ஏதாவது பண்றதுக்குள்ள கிளம்பி போயிடுடா.. கோபியை கைவிட்ட ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து பாக்கியா மூலம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்த சூழலில் இந்த வார பிரமோவில் கோபியை அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு செழியன் மற்றும் எழில் இருவரும் கூறுகின்றனர். இதையடுத்து அவர்களிடம் சண்டைக்கு போகிறார் கோபி.
தொடர்ந்து பாக்கியாவும் இது தன்னுடைய வீடு என்றும் கோபி வெளியேற வேண்டும் என்றும் கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. கோபிக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் திரண்ட சூழலில் ராதிகாவும் இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடியும்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியல், இந்த வாரமும் தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளைப் பெற்று சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து மறைந்து வந்தார் கோபி. தான் தாத்தாவான சூழலில் தான் அப்பாவாக போகும் விஷயத்தை எப்படி குடும்பத்தினரிடையே கூறுவது என்று அவர் அவமானமாக உணர்ந்த நிலையில் இந்த விஷயத்தை தொடர்ந்து அனைவரிடமும் மறைத்து வந்தார்.
ஈஸ்வரியை அவமானப்படுத்திய ராதிகா: இந்நிலையில் தன்னுடைய அம்மா ஈஸ்வரியை மட்டும் தனியாக அழைத்து சென்று ராதிகாவின் கர்ப்பம் குறித்து அவர் கூறுவதாக காணப்பட்டது. இதையடுத்து இந்த விஷயத்தில் குடும்ப மானமே போகும் என்று ஈஸ்வரியும் உணர்ந்த நிலையில் அந்த கர்ப்பத்தை கலைக்குமாறு ராதிகாவிடம் கூறுகிறார். ஆனால் இந்த குழந்தை தங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தானும் கோபியும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ராதிகா உறுதியாக கூறிவிடுகிறார். மேலும் இது குறித்து ஈஸ்வரி எதுவும் பேச வேண்டாம் என்று கூறி அவரை அவமானப்படுத்தி வெளியேற்றுகிறார்.
ராதிகாவின் கர்ப்பம்: இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஈஸ்வரி, இந்த விஷயத்தை குடும்பத்தினர் அனைவரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறுகிறார். ஆயினும் ராதிகாவின் வற்புறுத்தலால் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குகிறார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்த ராதிகா, கோபி அனைவரிடமும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்த உள்ளதாக கூறுகிறார். கோபி ராதிகாவின் கர்ப்பம் குறித்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து தயக்கம் காட்டிய நிலையில் பாக்யா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கோபி மீண்டும் அப்பாவாக போகிறார் என்ற விஷயத்தை குடும்பத்தினர் அனைவரின் முன்பும் போட்டுடைக்கிறார்.
வீட்டைவிட்டு வெளியே போங்கள்: இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் எழில் மற்றும் செழியன் இருவரும் கோபி இந்த வீட்டில் இருப்பது தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தாத்தா, பாட்டியிடம் கூறுகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் மல்லு கட்டும் கோபி, இந்த வீடு தான் கட்டியது என்றும் அங்கிருந்து தன்னை வெளியே போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் மார்தட்டி பேசுகிறார். இதைக் கேட்கும் பாக்கியா, ஆத்திரத்துடன் அந்த வீடு தன்னுடையது என்றும் தான் கூறினால் கோபி வெளியே சென்று தான் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார்.
கோபியை கைவிட்ட ஈஸ்வரி: இதனால் அதிர்ச்சியடைந்தாலும் அவரிடமும் சண்டைக்கு போகிறார் கோபி. தொடர்ந்து செழியன் மற்றும் எழில் இருவரும் தங்களின் அம்மாவை எதிர்த்து அவர் பேசக்கூடாது என்று மிகவும் அழுத்தமாகவும் அதே நேரம் கோபத்துடனும் கூறுகின்றனர். இந்நிலையில் யார் சொன்னாலும் தான் அங்கிருந்து போக மாட்டேன் என்றும் தன்னுடைய அம்மா சொல்லட்டும் என்றும் கோபி கூறுகிறார். இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி, கோபியின் மகன்கள் அவரை ஏதாவது செய்வதற்கு முன்பு அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவதாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது. தான் மிகவும் நம்பியிருந்த தன்னுடைய அம்மாவும் தன்னை கைவிட்ட சூழலில் செய்வது அறியாமல் முழிக்கிறார் கோபி இவை அனைத்தையும் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராதிகா.


Click it and Unblock the Notifications











