Baakiyalakshmi serial: கோபிக்கு எதிராக பாக்கியா அதிரடி.. கைது செய்த போலீஸ்.. இனி என்ன நடக்கும்?
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து சேனலின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது /முதல் இடத்தில் இருந்த இந்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலிடம் தன்னுடைய முதல் இடத்தை விட்டுக் கொடுத்தது. ஆனால் தற்போது அடுத்தடுத்து கீழிறங்கி நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து இந்த சீரியல் விரைவில் எண்ட் கார்டு போட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த சீரியலின் காட்சிகள் அதையொட்டி அமைந்து வருவதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாக்கியாவின் வளர்ச்சியை தடை செய்யும் வகையில் அடுத்தடுத்து கோபி செயல்பட்டுவந்த நிலையில், அதை தற்போது பாக்கியா முறியடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகளை கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியலுக்கு அதிகமான டிஆர்பி கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியல் விரைவில் எண்ட்கார்டு போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையொட்டிய காட்சிகளே தற்போது அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன. பாக்கியாவை ஒழித்து கட்ட வேண்டும், அவரை வளர விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு கோபி தொடர்ந்து அடுத்தடுத்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கோபியின் சதி: இதன் ஒரு பகுதியாக தன்னிடம் வேலை செய்யும் ஆனந்த் என்பவரை பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்த்து கெட்டுப்போன கறியை வைத்து பிரியாணி டிஸ்ட்ரிபியூஷன் செய்ய வைத்தார். இதனால் பாக்கியாவின் ரெஸ்டாரண்ட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கையும குறைந்த நிலையில் இந்த விஷயத்தில் தற்போது உண்மையை பாக்கியா உணர்ந்து கொண்டுள்ளார். அவர் மட்டுமில்லாமல் கோபியின் அம்மா உள்ளிட்டவர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்துள்ளது. இதையடுத்து கோபியின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பாக்கியா அவரை தான் சும்மா விட மாட்டேன் என்று எச்சரிக்கிறார்.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் இதையொட்டிய காட்சிகள் இன்றைய எபிசோடில் காணப்பட்டன. கோபியின் இந்த செயல்பாடு அவரது இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் மிகவும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் அவர் பாக்கியாவிடம் எந்த மாதிரியாக பேசுவது என்று தெரியாமல் முழித்ததையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் தன்னுடைய ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன கறியை மிக்ஸ் செய்தது கோபி தான் என்றும் தன்னுடைய வளர்ச்சியை பிடிக்காமல் அவர் ஆனந்தின் உதவியுடன் இவ்வாறு செய்ததாகவும் பாக்கியா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பதாக காணப்படுகிறது.

பாக்கியா கொடுத்த புகார்: இதை ஆனந்தும் ஒப்புக்கொண்ட நிலையில் கோபி வீட்டிற்கு வரும் போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இதை பார்த்து ராதிகா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதை பார்க்கும் செழியன் பரிதவிக்கிறார். தன்னுடைய அப்பாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்வதாக வந்து பாட்டியிடம் அவர் கதறலுடன் கூறுகிறார். அவர்கள் அனைவரும் வந்து கோபியை போலீசார் அழைத்து செல்வதை பார்ப்பதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து அடுத்ததாக கோபியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் சிறை செல்வாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவர் சிறை செல்லும் பட்சத்தில் இந்த சீரியல் நிறைவுக்கு வருமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











