Baakiyalakshmi serial: கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வந்த மயூ.. காப்பாற்றப்படுவாரா ஈஸ்வரி?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பாக காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள இந்த சீரியலின் இந்த வார ப்ரமோவில் ஈஸ்வரியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தீர்ப்பு வழங்க நீதிபதி தயாராகிறார்.

அவருக்கு குறைந்தபட்சமாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று ராமமூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் முன்னதாக யூகித்த நிலையில் ஈஸ்வரியும் தான் செய்யாத குற்றத்திற்காக தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து மிகுந்த மன உளைச்சல் மற்றும் கண்ணீருடன் நீதிமன்றத்தில் நிற்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகாவை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றதுடன் அவரது கரு கலைய காரணமாக இருந்ததாக ராதிகாவின் அம்மா கமலா, ஈஸ்வரி மீது குற்றம் சாட்டிய நிலையில் ஈஸ்வரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது அவரது தீர்ப்பை நீதிபதி கூறவிருப்பதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. இதையொட்டி பாக்கியா மற்றும் ராதிகா குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

இந்த வார ப்ரமோ: இந்த வார பிரமோவில் நீதிமன்றத்திற்கு ஈஸ்வரி அழைத்து வரப்படுகிறார். தான் செய்யாத குற்றத்திற்காக தனக்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுமோ என்று மிகுந்த மன உளைச்சலுடன் அழுகையுடன் காணப்படும் ஈஸ்வரியை அந்த கோலத்தில் பார்த்த கோபி சஞ்சலப்படுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து ஈஸ்வரி ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறுவதாகவும் உடனடியாக அங்கு வரும் பாக்கியா, வழக்கறிஞரிடம் பேசுவதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது.

முக்கியமான சாட்சி: மேலும் தொடர்ந்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக ஒரு முக்கியமான சாட்சியை விசாரிக்க நீதிபதியிடம் வழக்கறிஞர் அனுமதி கோருகிறார். இதையடுத்து காரில் இருந்து மயூ இறங்குவதாகவும் நீதிமன்றத்திற்கு வரும் மயூவை பார்த்து அவர்தான் சாட்சியா என்று கோபி, ராதிகா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைவதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து கோர்ட் சாட்சி கூண்டில் ஏறும் மயூவையும் இந்த பிரமோவில் பார்க்க முடிகிறது. முன்னதாக பாக்கியாவை பார்க்கில் பார்க்கும் மயூ, தன்னுடைய அம்மா ராதிகாவை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்றும் பிளவர் வாஸ் தடுக்கி தான் அவர் கீழே விழுந்தார் என்றும் கூறுவதாக காணப்பட்டது.

பள்ளி சீருடையில் மயூ சாட்சி: இதையடுத்து சிறுமி என்பதால் அவரை எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது என்று பாக்கியா பழனிச்சாமியிடம் கவலையுடன் கேட்பதாகவும் கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. இது குறித்து அவர்கள் வழக்கறிஞரிடம் பேசிய நிலையில், கண்டிப்பாக மயூவின் சாட்சிதான் ஈஸ்வரியை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றும் என்று அவர் கூறுவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு மயூ பள்ளி சீருடையில் வருவதாக காணப்படுகிறது. ராமமூர்த்தி மற்றும் எழிலை நீதி மன்றத்திற்கு அனுப்பிவிட்டு, தனக்கு ஒரு சிறிய வேலை இருப்பதாக செல்லும் பாக்கியா, மயூவை பள்ளியிலிருந்து சாட்சி சொல்வதற்காக அழைத்து வருகிறார்.

கண்ணீரில் ஈஸ்வரி: இந்த விஷயத்தில் அவருடன் வழக்கம்போல பழனிச்சாமி துணை நிற்பதாக காணப்படுகிறது. ஈஸ்வரியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் நிலைக்கு நீதிபதி வரும் நிலையில், பாக்கியா இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு மயூவின் சாட்சியை அரங்கிற்கு கொண்டு வந்தது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கண்ணீருடன் நீதிபதியை மற்றும் தன்னுடைய குடும்பத்தினரை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரியும் மயூவை சாட்சி கூண்டில் பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியடைவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X