Baakiyalakshmi serial: நீங்க நினைச்ச மாதிரி கரு கலைஞ்சிடுச்சு இல்ல.. ராதிகாவை தள்ளி விட்டாரா ஈஸ்வரி?
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த சீரியலாக தொடர்ந்து டிஆர்பியில் அதிக புலிகளை பெற்று இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகி உள்ளது.
இந்த வார பிரமோவில் ராதிகாவின் கரு கலைவதாகவும் அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்றும் அவர்தான் தன்னை பிடித்து தள்ளிவிட்டார் என்றும் ராதிகா குற்றம் சாட்டுவதாகவும் காணப்பட்டது. இதையடுத்து கோபியும் தன்னுடைய அம்மா மீது பழி சுமத்துவதாக இன்று வெளியாகி உள்ள பிரமோவில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார எபிசோட் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பேத்தி எடுத்த நிலையில் கோபியின் மனைவி ராதிகா கர்ப்பமானதால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என்பதாக ஈஸ்வரி தொடர்ந்து அந்த கருவை கலைத்து விடுமாறு கூறி வந்தார். இந்நிலையில் கோபி மற்றும் ராதிகா இருவரையும் வீட்டை விட்டு பாக்கியா மற்றும் எழில், செழியர் ஆகியோர் இணைந்து வெளியேற்றினர். வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தன்னுடைய அம்மா ஈஸ்வரியையும் ராதிகா வீட்டிற்கு அழைத்து வந்தார் கோபி.
கோபி -ராதிகா சண்டை: இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகளை கோபி சந்திக்க நேர்ந்தது. ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா கமலா இருவரும் தொடர்ந்து சண்டையிட்ட நிலையில் ஈஸ்வரி, அவர்களிடம் சாப்பிடாமல் முரண்டு பிடித்தார். இதனால் கோபி தன்னுடைய கிளவுட் கிச்சனிலிருந்து தொடர்ந்து ஈஸ்வரிக்கு மூன்று வேளையும் சாப்பாடு கொண்டு வந்து பரிமாறியதை பார்க்க முடிந்தது. தன்னுடைய அம்மாவை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று ராதிகாவிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார் கோபி. இதனால் கோபி மற்றும் ராதிகா இடையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் காணப்பட்டன.
ராதிகாவின் கரு கலைந்தது: இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் ராதிகாவும் ஈஸ்வரியும் எதிர் எதிரில் பார்த்துக் கொள்கின்றனர். அப்போது கோபத்துடன் ராதிகா தன்னுடைய அறைக்கு செல்ல முயலும்போது கீழே இருந்த ஒரு பொருள் தடுக்கி அவர் கீழே விழுந்து விடுகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கரு கலைந்ததாக மருத்துவர் கூறுகிறார். இதனால் ராதிகாவின் அம்மா, ஈஸ்வரி, கோபி என அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஆனால் ராதிகாவோ கோபியின் அம்மா தான் தன்னை தள்ளி விட்டதாகவும் அவர்கள் நினைத்தபடியே கரு கலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
ஈஸ்வரியை குற்றம் சாட்டிய கோபி: இதைக் கேட்டு ஈஸ்வரி தான் அப்படியெல்லாம் செய்வேனா என்று கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். ஆனால் ஈஸ்வரி நினைத்தது போல கரு கலைந்து விட்டது என்று பதிலுக்கு கோபி பேசுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. பேத்தி எடுத்த நிலையில் கோபிக்கு இந்த வயதில் இன்னொரு குழந்தை தேவையா என்றும் இதனால் குடும்ப கௌரவம் குலையும் என்றும் முன்னதாக ஈஸ்வரி, ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கூறி வந்தனர். தங்கள் குடும்பம் அவமானப்படக்கூடாது என்பதாகவே கோபியை அந்த வீட்டை விட்டு எழில் மற்றும் செழியன் இருவரும் வெளியேற்றினர்.
ஈஸ்வரி வெளியேறுவாரா?: இதையெல்லாம் தாண்டி தான் கண்டிப்பாக அந்த குழந்தையை பெற்றெடுப்பேன் என்று ராதிகா கூறினார். தனக்கு ஒன்றும் வயதாகவில்லை என்றும் இரண்டாவது குழந்தையை கண்டிப்பாக தான் பெற்றுக் கொள்வேன் என்றும் ராதிகா கூறிவந்த நிலையில், கோபி அவரை தடுக்க முடியாத நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது ராதிகாவின் கரு கலைந்துள்ளது. இதையடுத்து ஈஸ்வரி மீது அந்த பழி வந்துள்ளது. இதை பாக்கியாவிடம் வந்து மிகவும் சோகமாக ஈஸ்வரி கூறுவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்பட்டது. தற்போது ராதிகா வீட்டில் ஈஸ்வரி உள்ள நிலையில் அவர் தொடர்ந்து அங்கேயே இருப்பாரா அல்லது பாக்கியா வீட்டிற்கு திரும்பி விடுவாரா என்பது குறித்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்..


Click it and Unblock the Notifications











