Baakiyalakshmi serial: தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. எழில் -அமிர்தா வருவார்களா?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராமமூர்த்திக்கு 80 வயது நிறைவடைந்த நிலையில் அவருக்கு இதற்காக விழா ஏற்பாடுகளை செய்ய பாக்கியா முடிவெடுக்கிறார். இதுகுறித்து ஈஸ்வரியிடமும் அவர் பேசுகிறார். எழில் வருவாரா என்பது குறித்து ஈஸ்வரி பதில் கேள்வி எழுப்புவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது.

கடந்த சில எபிசோட் களாக தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகளை மையப்படுத்திய காட்சிகளையே ஒளிபரப்பி வந்த நிலையில் அடுத்ததாக கொண்டாட்டம் மோடிற்கு சீரியல் பயணப்பட உள்ளது ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதையொட்டிய காட்சிகளையே இந்த வார பிரமோவில் பார்க்க முடிந்தது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் தொடர்ந்து விஜய் டிவியின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் தொடர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை இந்த தொடர் பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து சேனலில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. பாக்கியா என்ற கேரக்டரில் சுசித்ரா என்பவர் மிக இயல்பான நடிப்பை அளித்து வருகிறார்.

பாக்கியா கேரக்டர்: தன்னுடைய இயல்பான நடிப்பால் சுசித்ரா, அதிக நேரங்களில் நல்ல கமெண்ட்களையும் சில நேரங்களில் மொக்கை கமெண்ட்களையும் பெறுவது வாடிக்கையாக அமைந்துள்ளது. தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தில் பாக்கியா சிறப்பாக செயல்பட்டாலும் தன்னுடைய மாமியார், மாமனார் என அனைவரிடமும் மிகவும் பணிந்து போவது ரசிகர்களிடையே சில சமயங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் உறவு நிலையை மேம்படுத்த பணிந்து போவது நல்ல விஷயம்தான் ஆனால் தன்னுடைய கேரக்டரையும் விட்டுக் கொடுக்கும் வகையில் பாக்கியா இறங்கி போவது ரசிகர்களிடையே அநேக சமயங்களில் கடுப்பை ஏற்படுத்த தான் செய்கிறது.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் இந்த வார பிரமோவில் சிறப்பான பல காட்சிகளை பார்க்க முடிகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பிரச்சினைகளை மையமாக கொண்டு பாக்கியலட்சுமி சீரியலின் எபிசோட்கள் காணப்பட்ட நிலையில், அடுத்தது கொண்டாட்ட மோடிக்கு சீரியல் இறங்கவுள்ளது. இந்த வார பிரமோவில் ராமமூர்த்தியின் 80வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பாக்கியா திட்டமிடுவதாகவும் இதுகுறித்து தன்னுடைய மாமியார் ஈஸ்வரியிடம் பேசுவதாகவும் காணப்படுகிறது. முன்னதாக எழில், அமிர்தா மற்றும் நிலா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த கொண்டாட்டம் தேவையா என்று ராமமூர்த்தி கேட்பதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது.

ஈஸ்வரி கோபம்: தொடர்ந்து எழிலை இந்த விழாவிற்கு அழைப்பது குறித்து ஈஸ்வரி பாக்கியாவிடம் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியா, இது குறித்து எழில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவதாக காணப்படுகிறது. இதனிடையே எழிலுக்கு கால் செய்து பேசும் ஈஸ்வரி, இந்த விழா குறித்து கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் எழில், தான் இந்த விழாவில் பங்கேற்றால் ஈஸ்வரிக்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று கூறுவதாக காணப்படுகிறது. தொடர்ந்து இதனால் கோபமடையும் ஈஸ்வரி வந்தால் வா என்று கோபத்துடன் எழிலிடம் பேசுவதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.


எழில் பங்கேற்பாரா?: தன்னுடைய அம்மா, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் மிகவும் பாசத்துடன் இருந்து வருபவர் எழில். ஒரு தவிர்க்க முடியாத சூழலில் தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் கண்டிப்பாக இந்த விழாவில் பங்கேற்பார் என்பது முன்னதாக வெளியான ப்ரோமோவில் உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X