Baakiyalakshmi serial: நம்ம அத்தையா.. ஷாக்கான ராதிகா.. முழித்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடர் ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. தன்னுடைய கணவனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து பாக்கியா தானே முன்வந்து அவருக்கு விவாகரத்தை கொடுத்த நிலையில் அவரது அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய மகன்கள், மகளையும் அவர்களது எதிர்காலத்தையும் முன்னிட்டு செயல்பட்டு வருகிறார்.
மசாலா பிசினசில் துவங்கி தற்போது ரெஸ்டாரெண்ட் துவக்கம் வரையில் பாக்கியா தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். அவருடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கோபி தொடர்ந்து இடையூறு கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஜெனி மற்றும் செழியன் வாழ்க்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜெனியை பாக்கியா குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் எதிர்கொண்டனர். தான் ஜெனியுடன் இணைய தன்னுடைய அம்மா பாக்கியாதான் காரணம் என செழியன் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனிடையே இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியலின் முக்கியமான பிரச்சினையாக இருந்து வந்த செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்தில் தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. செழியனை வைத்து காய் நகர்த்தி வந்த மாலினியால் ஆத்திரம் அடைந்த ஜெனி, கோபித்துக் கொண்டு தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது அப்பா விவாகரத்திற்கு அப்ளை செய்திருந்தார்.
சமாதானமடைந்த ஜெனி: ஜெனி கோபத்திற்கு அவரது அப்பாவின் இந்த நடவடிக்கைக்கு உடன்பட்டதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஜெனி மற்றும் செழியன் இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும் என்று ஜெனியின் அம்மா மற்றும் அப்பாவிடம் தொடர்ந்து பாக்கியா வலியுறுத்தினார். இதனிடையே தன்னுடைய மகளின் மனநிலையை புரிந்துக் கொண்ட மரியம், அவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இருவரும் ஆத்திரப்பட்டு, அடித்துக் கொண்டு பேச அனைத்தும் சுபம். தற்போது குழந்தையுடன் ஜெனி பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த வார ப்ரமோ: அவரையும் அவரது குழந்தையையும் ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் வரவேற்கின்றனர். இந்த விஷயத்திற்கு முற்றிலும் தன்னுடைய அம்மா பாக்கியா தான் காரணம் என்று செழியன் புகழ் பத்திரம் வாசிக்க, அதை ஏற்க முடியாமல் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் திணறுகின்றனர். இதனிடையே இந்த வார பிரமோவில் இது தொடர்பான காட்சிகளை பார்க்க முடிந்தது. ராமமூர்த்தி, பாக்கியா இருவரும் பேசிக்கொண்டிருக்க, தான் ஜெனி சமாதானம் அடைந்து வீட்டிற்கு மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று ராமமூர்த்தி கூறுகிறார். இதை எப்படி சாத்தியப்படுத்தினாய் பாக்கியா என்று அவர் கேட்பதாக பிரமோவில் காணப்பட்டது.
பாக்கியாவிடம் ராதிகா கேள்வி: ஜெனியின் அம்மா மரியத்திடம் தொடர்ந்து பேசி செழியன் -ஜெனி இருவரையும் சந்திக்க வைத்ததாக பாக்கியா கூறுகிறார். இதனிடையே அங்கே வரும் ஈஸ்வரி, தான் செழியனின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததற்கு காரணம் ஜெனி அப்போதுதான் மனம் மாறி வீட்டுக்கு வருவார் என்று தான் நினைத்ததாக உருட்டுகிறார். இதைக் கேட்கும் ராமமூர்த்தி மற்றும் பாக்கியா இருவரும் என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழிப்பதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே பாக்கியாவிடம் இது குறித்து ராதிகா கேள்வி எழுப்புகிறார். ஒரே வார்த்தையில் ஈஸ்வரி, பாக்கியாவை காலி செய்துவிட்டதை சுட்டிக் காட்டும் ராதிகா, பாக்கியா இதை எப்படி ஈசியாக எடுத்துக் கொண்டார் என்று கேட்கிறார்.

நம்ம அத்தையா?: இதற்கு பதிலளிக்கும் பாக்கியா, சில நேரங்களில் ஈஸ்வரி பேசுவதை கேட்டு தனக்கு கோபம் வரும் என்றும் ஆனால் நம்ம அத்தை தானே என்று தான் விட்டுக் கொடுத்து விடுவதாகவும் பாக்கியா கூறுகிறார். இதையடுத்து நம்ம அத்தையா என்று ராதிகா மலைக்கிறார். நம்ம அத்தை எண்ணும்போது பாக்கியா மற்றும் ராதிகா இருவருக்கும் ஈஸ்வரி அத்தை என்று பாக்கியா குறிப்பிட்டதாக ராதிகா கேள்வி கேட்கிறார். அவரின் கேள்விக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளும் பாக்கியா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பதாக இந்த வார எபிசோடில் காணப்பட்டது. பாக்கியாவின் அனைத்து முயற்சிகளையும் கோபி தொடர்ந்து முறியடித்து வரும் சூழலில் அதற்கு அவ்வப்போது ராதிகாவும் துணைப் போனதையும் இந்த சீரியலில் பார்க்க முடிந்தது.
விரைவில் எண்ட் கார்ட்?: இந்நிலையில் கடந்த எபிசோடுகளில் ராதிகா தொடர்ந்து நல்லவிதமாக நடந்து கொள்வதையும் பாக்யாவிற்கு தொடர்ந்து சப்போர்ட் செய்வதையும் பார்க்க முடிகிறது. இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்துள்ள நிலையில் விரைவில் சீரியல் நிறைவுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீரியலில் கோபி தவிர்த்து அனைவரும் நல்லவர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். எழில் மற்றும் கதிரின் குடும்ப பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, தற்போது அவர்கள் இருவரும் தங்களது மனைவியுடன் சிறப்பாக மற்றும் நிம்மதியாக வாழ்வதையும் பார்க்க முடிகிறது. பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட்டும் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில் விரைவில் இந்த சீரியல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











