Baakyalakshmi serial: உலகமகா நடிப்புடா சாமி.. ராதிகா வீட்டில் ஆட்டத்தை துவங்கிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ராதிகாவின் கர்ப்பத்தை தொடர்ந்து கோபியை வீட்டை விட்டு வெளியேறுமாறு எழில், செழியன், பாக்கியா உள்ளிட்டவர்கள் கூற பாக்கியாவை பழிவாங்கும் முயற்சியாக தன்னுடைய அம்மா ஈஸ்வரியையும் ராதிகா வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி.

இதையடுத்து ஈஸ்வரியை இரு தினங்களில் வீட்டை விட்டு துரத்துவதாக ராதிகாவின் அம்மா சபதமிடுகிறார். ஆனால் ஈஸ்வரியின் அதிரடி செயல்களால் அவர் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வார பிரமோவில் இதையொட்டிய காட்சிகளை பார்க்க முடிகிறது.

Vijay TV s Baakiyalakshmi serial this week 20th to 25th May 2024 promo

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் தற்போது ராதிகாவின் கர்ப்பம் குறித்து தெரிய வந்ததால் கோபியை வீட்டை விட்டு வெளியேறுமாறு செழியன், எழில் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் கூறுகின்றனர். இதையடுத்து பாக்கியாவை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு தன்னுடைய அம்மா ஈஸ்வரியை தன்னுடன் ராதிகா வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி. அங்கு இரண்டு பெட்ரூம் மட்டுமே உள்ள சூழலில் ஈஸ்வரியை எங்கே தங்க வைப்பது என்பது குறித்த கேள்வி எழுகிறது. வீம்பிற்காக ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருவதாக ராதிகா கோபியிடம் சண்டை போடுகிறார்.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் தான் வந்தது ராதிகா மற்றும் அவரது அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்று ஈஸ்வரி, கோபியிடம் கூறுகிறார். ஆனால் யாரை பற்றியும் ஈஸ்வரி கவலை கொள்ள வேண்டாம் என்றும் தான் அவரை மகாராணியை போல பார்த்துக் கொள்வேன் என்றும் கோபி பதிலளிக்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி ஹாலில் இருந்தபடி தண்ணீர் கேட்க, உட்கார்ந்த இடத்திலேயே அதிகாரம் செய்ய வேண்டாம் என்று ராதிகாவின் அம்மா அதிரடியாக பதிலளிக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி உள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் ஈஸ்வரி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மேற்கொள்வதாக காணப்படுகிறது.

அதிரடி காட்டும் ஈஸ்வரி: இருப்பது இரண்டு ரூம் அதில் ஈஸ்வரியை எங்கே தங்க வைப்பது என்று ராதிகா கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மாவை ஹாலில் தூங்க சொல்கிறார் ஈஸ்வரி. தொடர்ந்து தன்னுடைய பெட்டியுடன் இரண்டாவது அறையில் சென்று கதவை தாழிட்டு கொள்கிறார். இதனால் ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரும் திகைக்கின்றனர். இந்நிலையில் உட்கார்ந்த இடத்திலேயே காபி, காபி என்று கத்துகிறார் ஈஸ்வரி. இதையடுத்து ராதிகா எழுந்து செல்ல முற்படும் சூழலில் அவரை செல்ல விடாமல் தடுக்கிறார் அவரது அம்மா. இதனால் ஈஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுவதாக நடிக்கிறார்.

உலகமகா நடிப்புடா சாமி: காலையிலிருந்து காபி, டிபன் என எதையுமே சாப்பிடவில்லை என்று கோபியிடம் ஈஸ்வரி கூறுகிறார். இதையடுத்து காலை 8:30 மணிக்குள் தன்னுடைய அம்மா டிபன் சாப்பிட்டு மாத்திரை போட வேண்டும் என்று ராதிகாவை கண்டிக்கிறார் கோபி. இதனால் ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரும் அச்சத்துடன் அவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில் மயக்க நிலையில் இருந்த ஈஸ்வரி, அதிரடியாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து டிவி ரிமோட்டை எடுத்து டிவி பார்க்க முயல்கிறார். அவரது இந்த நடிப்பை பார்த்து ராதிகாவும் அவரது அம்மாவும் திகைப்பதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது.

ஈஸ்வரி அதிகாரம்: ஈஸ்வரியை இரண்டு தினங்களில் அங்கிருந்து துரத்துவதாக ராதிகாவின் அம்மா முன்னதாக ராதிகாவிடம் சபதம் இட்டார். ஆனால் தான் அந்த வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் செல்ல மாட்டேன் என்று ஈஸ்வரி கூறிய நிலையில் அதை செயல்படுத்துவார் என்றே தெரிகிறது. எங்கு சென்றாலும் ஈஸ்வரி தன்னுடைய அதிகாரத்தால் மற்றவர்களை ஆக்கிரமிப்பதை காண முடிகிறது. ராதிகாவின் வீட்டிலும் அதையே தற்போது அவர் செயல்படுத்துகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X