Baakiyalakshmi serial: நான்னா அபார்ஷனா.. மீண்டும் ராதிகாவிடம் அடிஉதைப்பட்ட கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் இந்த பிரமோ வெளியாகியுள்ளது. ராதிகா கர்ப்பமாகியுள்ளதால், இந்த விஷயத்தை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என்பது குறித்து தெரியாமல் கோபி முழி பிதுங்குகிறார். செழியன் மூலமாக பேத்தி பிறந்துள்ள நிலையில், தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்ல அவருக்கு அவமானமாக இருக்கிறது.
எப்போதும் தீர்க்கமான முடிவுகளை எடுத்துவரும் ராதிகா, இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் உடனடியாக கூறுகிறார். இந்த விஷயத்தில் என்ன மாதிரியான முடிவெடுப்பது என்று தெரியாமல் உள்ளதாக கூறுகிறார். எப்போதும் கோபி, அவரது குடும்பத்தினர் மீது அதிக அக்கறை கொண்டிருப்பதால் இந்தக் குழந்தை மிகவும் அவசியம் என்று அவர் அறிவுரை கூற, அதை ராதிகா ஏற்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து 1100 எபிசோட்களை கடந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ராதிகா கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் கூறுவதற்கு அவமானமாக உணர்கிறார் கோபி. தன்னுடைய மகன் செழியன் மூலமாக தான் பேத்தியெடுத்த சூழலில் தன்னுடைய மனைவியின் கர்ப்பம் குறித்து குடும்பத்தினரிடம் சொல்ல அவருக்கு தயக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் இது தொடர்பான காட்சிகளே காணப்படுகின்றன.
இந்த வார ப்ரமோ: குழந்தை விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று ராதிகா கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். அதை நினைத்தால்தான் வயிற்றையெல்லாம் பிரட்டுவதாக கூறும் கோபி, தொடர்ந்து, குழந்தையை அபார்ஷன் செய்துவிடலாமா என்று ராதிகாவிடம் கேட்கிறார். தொடர்ந்து ராதிகா முறைப்பதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நழுவுகிறார். இதையடுத்து ராதிகா கோபியிடம் பாக்கியா கர்ப்பமானபோது எப்படி ரியாக்ட் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். விளைவுகளை உணராத கோபி, அந்த செய்தியை கேட்டவுடன் தான் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்ததாக கூறி வைக்கிறார்.
ராதிகாவிடம் உதைபடும் கோபி: இதையடுத்து பக்கத்தில் இருக்கும் தலையணையால் கோபியை மொத்தும் ராதிகா, பாக்கியா கர்ப்பமாக ஆனால் சந்தோஷப்படுவீர்கள், நான் கர்ப்பமாக ஆனால் அபார்ஷன் செய்ய சொல்வீர்களா என்று கேள்வி கேட்கிறார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் கோபி, அவரிடம் இருந்து லாவகமாக தலைகாணியை வாங்குவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. இந்தக் குழந்தையை பெற்றுக் கொள்ளும் தீவிரத்தில் ராதிகா காணப்படுகிறார். இந்நிலையில் இதுகுறித்து ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் கேள்விப்பட்டால் என்ன மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து நினைத்து கோபி முழி பிதுங்குகிறார்.
பாக்கியா மீது பழனிச்சாமிக்கு ஏற்பட்ட ஈர்ப்பு: இதனிடையே பாக்கியாவை உயிர்த்தோழியாக மட்டுமே நினைத்துவந்த பழனிச்சாமிக்கு தற்போது அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் எப்படி பாக்கியாவிடம் வெளிப்படுத்துவார், அனைவரையும் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பாரா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாக்கியா மற்றும் பழனிச்சாமி ஜோடி இணையவேண்டும் என்பதே செல்வி, எழில், பழனிச்சாமியின் அம்மா, பழனிச்சாமியின் அக்கா உள்ளிட்டவர்களின் ஆசையாக உள்ளது. இந்த விஷயத்தில் சீரியல் எப்படி போகும் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











