நான் எதுவும் பண்ணல.. போலீசிடம் சிக்கிய இனியா கதறல்.. அடுத்த பிரச்சினைக்கு தயாராகும் பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போதுதான் ஈஸ்வரியின் கைது உள்ளிட்டவற்றால் பாக்கியா, ராமமூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியிருந்தனர். இதனால் கோபியை ஈஸ்வரி வெறுக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோபி தன் வயிற்றில் பிறக்கவே இல்லை என்று தான் நினைத்துக் கொள்வதாக வெறுப்பை உமிழ்ந்துள்ளார் ஈஸ்வரி. முன்னதாக தன்னுடைய மாமியார் கமலா மற்றும் மனைவி ராதிகாவின் பேச்சை கேட்டு தன்னுடைய அம்மாதான் ராதிகாவை தள்ளிவிட்டு அவரது வயிற்றில் இருந்த கரு கலைய காரணமாக அமைந்ததாக கோபியும் நம்பியிருந்தார். தற்போது அந்த குற்றச்சாட்டிலிருந்து ஈஸ்வரி வெளிவந்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களாக ராதிகாவை ஈஸ்வரி தள்ளி விட்டதாகவும் அதனால் அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்ததாகவும் தொடர்ந்து ராதிகா மற்றும் கமலா குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து கமலா கொடுத்த புகாரில் ஈஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இதையொட்டி வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, பாக்கியாவின் முயற்சியால் மயூவின் சாட்சியை கொண்டு ஈஸ்வரி சிறை தண்டனையிலிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்துள்ளார்.
பார்ட்டிக்கு செல்லும் இனியா: தொடர்ந்து நடந்த விஷயங்களில் தன்னுடைய அம்மா ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க முயலும் கோபிக்கு பேரிடியாக ஈஸ்வரி, அவரை தலை முழுகுவதாக காணப்பட்டது. ஆனாலும் கோபி தொடர்ந்து தன்னுடைய அம்மாவை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஈஸ்வரியின் வெறுப்பு அதீதமாக உள்ள நிலையில், அவர் சமாதானமடையாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகியுள்ளது. இதில் தன்னுடைய கல்லூரியில் நண்பர்களின் வற்புறுத்தலையடுத்து அவர்களுடன் பார்ட்டிக்கு செல்கிறார் இனியா. அங்கு அவரது தோழிகளும் மது அருந்துவதாக காணப்பட்டது.
கைது செய்யப்படும் இனியா: இதனால் பயப்படும் இனியா, திரும்பிப் போய் விடலாம் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதனிடையே, இனியாவை சமாதானப்படுத்தும் அவரது ஃபிரெண்ட்ஸ் அவரையும் சேர்த்துக் கொண்டு டான்ஸ் செய்வதாக காணப்படுகிறது. இதனிடையே, இனியா குறித்து கல்லூரி சீனியர் ஒருவர் மோசமாக பேச, இனியாவுடன் வந்த நண்பர் அவரிடம் சண்டைக்கு போவதாகவும் இந்த பிரமோவில் அடுத்தடுத்து காணப்படுகிறது. அவர்களை அனைவரும் இணைந்து தடுக்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் போலீசார், இனியா உள்பட அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும் காணப்பட்டது.
இனியா கதறல்: இதையடுத்து தான் எதுவும் செய்யவில்லை என்று இனியா கதறுவதாகவும் முன்னதாக இனியாவிற்கு கால் செய்யும் பாக்கியா, அவர் காலை எடுக்காததால் மிகவும் டென்ஷன் ஆவதாகவும் இந்த பிரமோவில் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்துள்ளன. தற்போது தான் ஈஸ்வரியின் கைது, அதையொட்டிய வழக்கு என பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனவைரும் மிகப்பெரிய பரிதவிப்பில் இருந்தனர். இந்நிலையில் தற்போது அடுத்ததாக இனியாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றது மிகப்பெரிய விவகாரமாக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரிடையே வெடிக்கும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











