Baakiyalakshmi serial: உங்க அம்மாவை கொலைகாரின்னு எப்படி நம்புனீங்க.. கோபியை விளாசிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ வெளியிடப்பட்டுள்ளது. கொலைகாரி என்று முத்திரை குத்தி தன்னுடைய அம்மாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு செய்கிறார் கோபி. இதனால் மனமுடைந்து தெருவில் நின்று கொண்டிருந்த ஈஸ்வரியை பார்த்து ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்கியா.
தொடர்ந்து இந்த வாரம் வெளியாகியுள்ள பிரமோவில் தன்னை கோபி கொலைக்காரி என்று கூறிவிட்டதை சொல்லி சொல்லி ஈஸ்வரி கண்ணீருடன் புலம்புவதை பார்க்க முடிந்தது. தன்னுடைய மகன் கோபியை எந்த நேரத்திலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டு வந்தார் ஈஸ்வரி. அவரை தற்போது நிர்கதியாக விட்டுள்ளார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகா மற்றும் கமலா இருவரும் ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டினர். இதை மறுத்து பேசிய கோபி ஒரு கட்டத்தில் நம்பி, தன்னுடைய அம்மாவிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். தன்னுடைய குழந்தை கருவிலேயே இல்லாமல் போனதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று அவரும் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து கமலா மற்றும் ராதிகா இருவரும் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்துகின்றனர். இதனால் பெட்டி படுக்கையுடன் ஈஸ்வரி அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ஈஸ்வரியை கைகழுவிய கோபி: தொடர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தெருவிலேயே நின்று கொண்டிருந்த ஈஸ்வரியை பாக்கியா பார்த்து கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார். இவ்வாறு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த சீரியலின் இந்த வாரத்திற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்னை போய் கொலைகாரி என்று கோபி சொல்லிவிட்டானே என்று தன்னுடைய கணவர் மற்றும் பாக்கியாவிடம் ஈஸ்வரி அழுதபடி புலம்புகிறார். இதையடுத்து அவர்கள் ஈஸ்வரியை சமாதானம் செய்கின்றனர். தொடர்ந்து கோபி ஈஸ்வரியை புரிந்து கொள்வார் என்று பாக்கியா கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.
விளாசிய பாக்கியா: இதையடுத்து மறுநாள் காலையில் வாக்கிங் போகும்போது கோபியை சந்திக்கும் பாக்கியா, தன்னைவிட ஈஸ்வரி குறித்து கோபிக்கு தான் அதிகமாக தெரியும் என்றும் அவரை போய் கொலைகாரி என்று எப்படி நம்பினீர்கள் என்றும் கோபியை விளாசுவதாக காணப்பட்டது. இதனால் கோபி குழப்பத்துடன் யோசிப்பதாகவும் இந்த வார பிரமோவில் காணப்பட்டது. ஈஸ்வரி தள்ளிவிட்டதில் தான் தன்னுடைய கரு கலைந்ததாக ராதிகா மற்றும் கமலா இருவரும் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். தான் அப்படி செய்யவில்லை என்று ஈஸ்வரியும் கூறிய நிலையில் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.
மனம் உடைந்த ஈஸ்வரி: அவர்கள் இருவரும் கூறியதை கேட்டு கோபியும் அதை நம்புகிறார். தொடர்ந்து தன்னுடைய குழந்தை இல்லாமல் போனதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுவதாக காணப்பட்டது. ராதிகா மற்றும் கமலா இருவரும் குற்றம் சாட்டிய போதும் மனம் உடையாமல் தொடர்ந்து பேசி வந்த ஈஸ்வரி, ஒரு கட்டத்தில் கோபி தன்னை கொலைகாரி என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து போகிறார். கோபியின் இக்கட்டான நேரங்களில் அவருடன் எப்போதும் துணை நிற்கும் ஈஸ்வரியை கோபி இந்த இக்கட்டான நேரத்தில் கைவிட்டதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











