Baakiyalakshmi serial: ராமமூர்த்தியின் சதாபிஷேகத்திற்கு வரும் கோபி.. அவமானப்படுத்திய ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளையொட்டி சதாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஈஸ்வரியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் எழில். அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது குறித்து குடுமபத்தினர் அனைவரும் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்த நிலையில் அமிர்தாவின் வழிகாட்டுதலில் எழில் விழாவில் பங்கேற்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வரும் சூழலில், வழக்கம்போல இந்த வார டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று இந்தத் தொடர் சேனலின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. ஈஸ்வரியின் கைது, இனியாவின் பிரச்சினை, எழில் வீட்டை விட்டு வெளியேறியது என அடுத்தடுத்து இந்த சீரியலில் பிரச்சினைகளே காணப்பட்ட நிலையில் தற்போது கொண்டாட்ட மோடிற்கு அனைவரும் திரும்பியுள்ளனர். ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளையொட்டி சதாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வார ப்ரமோ: கொண்டாட்டம் இருந்தாலும் பிரச்சினைகள் இல்லாமலா என்பதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக முன்னதாக ஈஸ்வரியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டைவிட்டு அமிர்தா மற்றும் நிலாவுடன் வெளியேறிய எழில், இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்வி குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமில்லாமல் ரசிகர்களிடையேயும் இருந்தது. ஆனால், இதற்கெல்லாம் பதிலளிக்கும்வகையில், அமிர்தாவின் வழிகாட்டுதலின்படி எழில் இந்த சதாபிஷேகத்தில் பங்கேற்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தவார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சியில் கோபியும் பங்கேற்பதாக காணப்படுகிறது.
சதாபிஷேகத்திற்கு வரும் கோபி: தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரமோவில், அழைப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய அப்பாவின் சதாபிஷேக விழாவிற்கு கோபி வருகிறார். தொடர்ந்து அங்கு நடக்கும் சாங்கியங்களில் பாக்கியா, எழில், செழியன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பதை பார்த்து, ஆர்வத்துடன் ராமமூர்த்தியை பார்த்து அப்பா என்று கூறிக் கொண்டு செல்கிறார். ஆனால் அவரது வருகையை விரும்பாத ராமமூர்த்தி யாருக்கு யார் அப்பா என்று கேள்வியுடன் அவரை நிராகரிக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தான் கொண்டுவந்த கிப்டை கோபி கொடுக்க முயல ராமமூர்த்தி அதை தட்டி விடுகிறார்.
கோபியின் சுயநலம்: கோபி தங்களது மகனே கிடையாது என்றும் இந்த விழாவை தங்களது மகள் பாக்கியா தங்களுக்காக செய்வதாகவும் ஈஸ்வரி காட்டமாக கோபியிடம் கூறுகிறார். தொடர்ந்து, தயவு செய்து தன்னை அம்மா என்று கூப்பிடாதே என்று அவர் கூறுவதாகவும் காணப்பட்டது. தாங்கள் செத்தாலும் கோபி தங்களை வந்து பார்க்கக்கூடாது என்றும் அவர் கண்டிப்புடனும் உறுதியுடனும் கூறுவதாக இந்த வார பாக்கியலட்சுமி சீரியலின் பிரமோ காணப்படுகிறது. கோபி தன்னுடைய வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு மற்றும் அவரது சுயநலம் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளையே கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











