Baakiyalakshmi: எங்ககிட்டயேவா.. ஈஸ்வரிக்கு எதிராக வில்லத்தனத்தை துவங்கிய கமலா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வார டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சீரியல்களில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளது. சேனலிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ராதிகா வீட்டில் தங்கியிருக்கும் ஈஸ்வரி, தன்னுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கமலா மற்றும் ராதிகாவிற்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் கடுப்பான கமலா, தற்போது தன்னுடைய வில்லத்தனத்தை துவங்கியுள்ளார். கமலாவின் நடவடிக்கையில் சிக்கிக் கொண்டு ஈஸ்வரி திணறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. கோபியின் பேச்சைக் கேட்டு ராதிகாவின் வீட்டில் தங்குகிறார் ஈஸ்வரி. இதனால் ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மா கமலாவிற்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாக்கியா வீட்டில் அதிகாரம் செய்ததைப் போலவே ராதிகா வீட்டிலும் அதிகாரம் செய்ய நினைக்கிறார் ஈஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தும் தனக்கு வர வேண்டும் என்று அவர் அதிகாரம் செய்ய, இதற்கு கமலா உடன்படாத சூழல் காணப்படுகிறது.
வில்லத்தனத்தை துவங்கிய கமலா: இதனால் கமலாவை பழிவாங்கும் வகையில் அடுத்தடுத்து பிரச்சனைகளை செய்கிறார் ஈஸ்வரி. ஆனால் அந்த பழியை கமலா மீதும் ராதிகா மீதும் தொடர்ந்து போடுகிறார். அவர் வந்து ஒன்றிரண்டு நாட்களிலேயே இத்தகைய வில்லத்தனத்தை செய்வதை பார்க்கும் ராதிகா, அவரை உடனடியாக பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கோபியிடம் சண்டையிடுவதாக காணப்பட்டது. மேலும் ராதிகா வீட்டில் இரண்டு ரூம்களே உள்ள சூழலில் கோபியை ஹாலில் படுக்க வைத்த சூழலும் காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஈஸ்வரியின் அட்ராசிட்டியால் பாதிக்கப்பட்ட கமலா, தற்போது தன்னுடைய வில்லத்தனத்தை துவங்கியுள்ளார்.
இந்த வார ப்ரமோ: இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் ஈஸ்வரிக்கு காபி கொண்டு வந்து கொடுக்கும் கமலாவிடம் காபி நன்றாக இல்லை என்று ஈஸ்வரி கூறி திரும்பி கொடுப்பதாக காணப்படுகிறது. இதையடுத்து அந்த காஃபியை தட்டிவிடும் கமலா, ஏன் காபியை கொட்டினீர்கள் என்று கேள்வி எழுப்புவதாக அமைகிறது. இதையடுத்து அங்குவரும் ராதிகா, தன்னுடைய மாமியார் ஈஸ்வரியிடம் சண்டையிடுவதாகவும் காணப்படுகிறது. இதையடுத்து இந்த விஷயம் ஈஸ்வரி மூலம் உடனடியாக கோபி காதுக்கு போகிறது. அவர் வீட்டிற்கு வந்து காபி கொட்டியிருப்பதை பார்க்கிறார்.
செந்திலிடம் கோபி புலம்பல்: இதை எடுத்து தான் கொட்டவில்லை என்றும் கமலா தான் கொட்டியதாகவும் ஈஸ்வரி கூறுகிறார். ஆனால் பதிலுக்கு கமலாவும் சண்டையிட அவர்கள் இருவரிடையே சண்டை வலுக்கிறது. இதனால் கோபிக்கு நிம்மதி இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் தன்னுடைய நண்பன் செந்திலிடம் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கோபி புலம்புவதாக காணப்படுகிறது. இதையெல்லாம் கேட்கும் போது எனக்கே தலை சுற்றுகிறது நீ எப்படி சமாளிக்கிறாய் என்று செந்தில் கோபியிடம் கேட்பதாகவும் இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது.
களமிறங்கிய கமலா: பாக்கியா வீட்டில் மிகப்பெரிய அளவில் அதிகாரம் செய்து வந்தார் ஈஸ்வரி. தன்னுடைய கெத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அடிக்கடி பாக்கியாவை மட்டம்தட்டி பேசுவதும் தன்னுடைய மகன் கோபியை உயர்த்தி பேசுவதுமாக இருந்தார். ஆனால் இதையெல்லாம் சகித்துக் கொண்டு பாக்கியா தொடர்ந்து தன்னுடைய மாமியார் மற்றும் மாமனாருக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வந்தார்.. இந்நிலையில் தற்போது அதே விதமான மரியாதையை கமலாவிடமும் ராதிகாவிடமும் எதிர்பார்த்து ஈஸ்வரி ஏமாற்றமடைகிறார். தன்னுடைய வில்லத்தனத்தால் அவர் தொடர்ந்து கமலாவை எதிர்த்துவந்த சூழலில், நானும் சளைத்தவளில்லை என்று தற்போது களமிறங்கியுள்ளார் கமலா.


Click it and Unblock the Notifications











