Baakiyalakshmi: பாக்கியாவிற்கு நான் கர்ப்பமான விஷயம் தெரியும்.. கோபியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ராதிகா
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பம் அடைந்தது குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தொடர்ந்து மறைத்து வருகிறார் கோபி. தான் தாத்தாவான சூழலில் தன்னுடைய மனைவியின் கர்ப்பம் அவரை அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆனாலும் ராதிகாவின் வாந்தி மற்றும் வித்தியாசமான நடவடிக்கைகளால் பாக்கியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்து அவர் நேரடியாக ராதிகாவிடமே கேட்கிறார். அவருக்கு உண்மையும் தெரிய வருகிறது, இந்த விஷயம் பாக்கியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பமான விஷயத்தை தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூற முடியாமல் தொடர்ந்து அவமானப்பட்டு நிற்கிறார் கோபி. இந்த விஷயம் தெரிய வந்தால் அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து யோசிக்க கூட அவரால் முடியவில்லை. இந்நிலையில் ராதிகா தொடர்ந்து வாந்தி எடுப்பதும் அவரது நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பாக்கியாவிற்கு தெரியவந்த உண்மை: அவரது முகத்தில் மினுமினுப்பு காணப்படுவதாக ஈஸ்வரியும் கூறுகிறார். இந்நிலையில் ராதிகாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் சந்தேகத்திற்கு உள்ளாகும் பாக்கியா, அவரிடம் இது குறித்து தனியாக இருக்கும்போது நேரடியாகவே கேட்டு விடுகிறார். முதலில் மறுத்தாலும் பின்பு பாக்கியாவிடம் தன் கர்ப்பமாக இருப்பதை கூறுகிறார் ராதிகா. இதனால் பாக்கியா மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது. அவரிடம் உண்மையை கூறிய நிம்மதியுடன் ராதிகா காணப்படுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வார பிரமோவில் வழக்கம் போல பாக்கியாவிடம் கெத்து காட்டுகிறார் கோபி.
இந்த வார ப்ரமோ: ஆனால் அவரை சிறிதும் மதிக்காத பாக்கியா, அவரிடம் கோபமாக நடந்து கொள்வதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. அவரது இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கோபிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதையடுத்து பாக்கியா ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று ராதிகாவிடம் வந்து அவர் கேட்பதாகவும் அதற்கு ராதிகா தான் கர்ப்பமாக இருப்பது குறித்து பாக்கியாவிற்கு தெரியும் என்று கூறுவதாகவும் இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது. இதை கேட்டு கோபி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாவதாகவும் காணப்பட்டது. ராதிகாவின் கர்ப்பம் குறித்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வந்த சூழலில் குடும்பத்தினருக்கும் அடுத்ததாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராதிகாவின் கர்ப்பம்: ஏறக்குறைய 50 வயதை நெருங்கிய கோபி, இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதால் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை அவர் சந்திக்க நேரும் என்பது குறித்துதான் அவர் யோசித்து வருகிறார். தன்னுடைய மகனுக்கு குழந்தை பிறந்துள்ள சூழலில் அதைவிட இரு வயது குறைந்து தன்னுடைய மகன்/மகள் பிறப்பது குறித்தும், அதையொட்டிய உறவு மாறுபாடுகள் குறித்தும் அவர் முன்னதாகவே கனவு மூலம் கண்டு உணர்ந்து அலறி அடித்ததை எபிசோடில் நாம் முன்னதாக பார்க்க முடிந்தது. இந்நிலையில் ராதிகாவின் கர்ப்பம் அந்த குடும்பத்தில் அடுத்தடுத்து என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











