பாக்கியலட்சுமி சீரியல்: மகளாக பாக்கியா செய்த சடங்குகள்.. ராமமூர்த்தியின் இறுதிப் பயணம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் முக்கியமான கட்டத்தில் தற்போது சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் தாத்தாவாக சீரியல் கேரக்டர்களால் மட்டுமில்லாமல் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ராமமூர்த்தி காலமான நிலையில், அவரது இறுதி சடங்குகள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கேரக்டரில் நடித்துவந்த ரோசாரியோ, மேலும் சீரியல்களில் நடித்துவரும் நிலையில், இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். பாக்கியலட்சுமி கேரக்டரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் பாக்கியாவை காயப்படுத்திய நிலையில், எப்போதும் தன்னுடைய மருமகளுக்கு துணையாக இருந்தவர் ராமமூர்த்தி.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியல் ஐந்து ஆண்டுகளை கடந்து சேனலில் முன்னணி சீரியலாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. ஒரே மாதிரியான காட்சிகள் இந்த சீரியலில் வருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முழித்துக் கொண்டார் சீரியல் இயக்குநர். இந்த சீரியல் நிறைவடையவுள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரையில் சீரியல் தொடரும் என்றும் அதை தொடர்ந்து டிஆர்பியை வைத்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் சீரியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி மறைவு: அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளை பாக்கியலட்சுமி சீரியலில் இணைத்து வருகிறார் இயக்குநர். ராதிகாவின் கருச்சிதைவு, அதையொட்டிய பிரச்சினைகள், ஈஸ்வரியின் கைது, அவரை விடுவிக்க பாக்கியா மேற்கொண்ட சிரமங்கள், போலீசில் சிக்கிய இனியா, கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி, கோபியை வெறுத்து தன்னுடைய இறுதிச்சடங்கை அவர் செய்யக்கூடாது என்று கூறிய ராமமூர்த்தி என அடுத்தடுத்து பரபரப்பான கட்டங்களை சீரியலில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அனைவருக்கும் இனிமையானவராக இருந்த தாத்தா ராமமூர்த்தி காலமாகியுள்ளார்.
இந்த வார ப்ரமோ: இதையொட்டி இன்றைய எபிசோடில், அனைவரும் மனம்கலங்கி அழுததை பார்க்க முடிந்தது. அதிர்ச்சியில் உறைந்து போன ஈஸ்வரியும் ஒரு கட்டத்தில் வெடித்து அழுததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்களின் பிரமோ வெளியாகியுள்ளது. அதில் ராமமூர்த்திக்கு கோபி எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று ஈஸ்வரி கூறுகிறார். இதையடுத்து உடைந்துபோகும் கோபி, இவ்வளவு பெரிய தண்டனையை தனக்கு தரவேண்டாம் என்று கதறுகிறார். தொடர்ந்து பாக்கியாதான் அனைத்து சடங்குகளையும் ராமமூர்த்திக்கு செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் அவரது ஆத்மா சாந்தியடையும் என்றும் ஈஸ்வரி கூறுகிறார்.
இறுதி சடங்கை செய்த பாக்கியா: இதையடுத்து கண்கலங்கி அழும் பாக்கியா, ராமமூர்த்தியின் இறுதிப்பயணத்தை சிறப்பாக கிளப்புகிறார். தொடர்ந்து ராமமூர்த்திக்கு இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. இறுதி சடங்குகளை செய்யும் பாக்கியா, தொடர்ந்து ராமமூர்த்திக்கு தன்னுடைய மகன்களுடன் இணைந்து சுடுகாட்டிற்கு சென்று கொள்ளி வைப்பதாகவும் இந்த வார எபிசோடில் காணப்படுகிறது. அனைவருக்கும் இணக்கமாக இந்த சீரியலில் சிரித்த முகத்துடன் பேராண்டி என்று எழில், செழியனை வாய்நிறைய கூப்பிட்டு வந்த ராமமூர்த்தியின் முடிவு ரசிகர்களையும் கண்கலங்கி கமெண்ட் செய்ய வைத்து வருகிறது. தொடர்ந்து இந்த வீடியோ யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











