Baakiyalakshmi serial: வீட்டை காலி செய்த ராதிகா.. கோபி அதிரடி முடிவு.. திரும்பவும் முதல்லருந்தா?
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியல் தொடர்ந்து 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதுகுறித்து சீரியலின் கோபி கேரக்டரில் நடித்துவரும் நடிகர் சதீஷ் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் அதற்கான எந்த முகாந்திரமும் இந்த சீரியலில் காணப்படவில்லை. மாறாக அடுத்தடுத்த காட்சிகளால் சீரியல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று சேனலின் இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் மீண்டும் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தன்னுடைய 2வது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிடம் பாக்கியலட்சுமி தொடர் பறிகொடுத்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் கோபி, ராதிகா, பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட லீட் கேரக்டர்கள் அடுத்தடுத்த காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
1300 எபிசோட்கள்: பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடை போட்டு வரும் நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபி கேரக்டரில் நடித்துவரும் நடிகர் சதீஷ் சில தினங்களுக்கு முன்பு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக் வந்து கோபி மயங்கிய நிலையில் அவரை காப்பாற்றி உயிர் பிழைக்க காரணமாக அமைந்தார் பாக்கியா. இந்நிலையில் ராதிகாவுடன் அவர் தொடர்ந்து வாழ்ந்தால் அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று கூறி ஈஸ்வரி அவரை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வருகிறார். இந்த விஷயம் பிடிக்காத நிலையிலும் மாமியாரின் முடிவுக்கு உடன்படுகிறார் பாக்கியா.
சதி செய்யும் ஈஸ்வரி: இதனால் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கோபியை பார்க்க பாக்யா வீட்டிற்கு ராதிகா வரும்போதெல்லாம் அவரை அவமானப்படுத்தி ஈஸ்வரி, இனியா உள்ளிட்டவர்கள் வெளியேற்றுவதாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த இக்கட்டான சூழலில் தன்னுடைய பழைய தோழியான ராதிகாவை கைவிடாமல் தொடர்ந்து அவருக்கு பாக்கியா சப்போர்ட் செய்து வருகிறார். இந்நிலையில் ராதிகாவை சந்திக்கும் வாய்ப்பை கோபிக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்று கங்கணம் கட்டும் ஈஸ்வரி, அவரை தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு அழைத்து செல்கிறார்.
இந்த வார பிரமோ: அந்த நேரத்தில் மனம் வெறுத்த ராதிகா வீட்டை காலி செய்ய முடிவெடுத்து செயல்படுத்துகிறார். இதுகுறித்து தெரிந்து கோபியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள பாக்கியா முற்படுகிறார். ஆனால் இனியா, ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் இதை தடுக்கின்றனர். வீட்டிற்கு கோபி திரும்பிய சூழலில் அவரை தனியாக அழைத்துச் சென்று ராதிகா வீடு மாறியது குறித்து பாக்கியா கூறுகிறார். இதைக் கேள்விப்படும் கோபி, மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவதுடன் உடனடியாக சென்று ராதிகாவை பார்க்க முயல்கிறார். ஈஸ்வரி தடுத்த நிலையிலும் தன்னுடைய இரண்டாவது மனைவியான ராதிகாவை வீட்டில் சென்று பார்க்க முடிவெடுக்கிறார்.
கோபியிடம் பாக்கியா கோபம்: ஆனால் ராதிகா ஏற்கனவே வீட்டை காலி செய்து விட்டது தெரியவருகிறது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில், ராதிகா வீட்டை விட்டு காலி செய்தது குறித்து தெரிந்து கோபி மனவருத்தத்துடன் தன்னுடைய அம்மா உள்ளிட்டவர்களிடம் பேசுகிறார். அப்போது ராதிகா வீட்டை காலி செய்வதற்கு காரணமாக கோபி அமைந்திருக்கக் கூடாது என்று பாக்கியா சுட்டிக் காட்டுகிறார். இந்நிலையில் ராதிகாவின் புதிய வீடு குறித்து தெரிந்து அங்கு சென்று கோபி அவரை பார்ப்பதாகவும் சமாதானப்படுத்துவதாகவும் இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது.
கோபி அதிரடி முடிவு: இந்நிலையில் கோபி மீண்டும் தன்னிடம் வருவான் என்று ஈஸ்வரி நம்பிக்கையுடன் பாக்கியாவிடம் கூறுகிறார். அதேபோல கோபியும் வருகிறார். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட். மீண்டும் ராதிகா மற்றும் மயூவை அழைத்துக் கொண்டு கோபி பாக்கியா வீட்டிற்கு வருவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சி அடைவதாகவும் இந்த பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. முன்னதாகவும் உடல்நிலை சரியில்லாமல் பாக்கியா வீட்டிற்கு கோபி வந்த சூழலில் ராதிகாவும் உடன்வந்து பல பிரச்சினைகளை சந்தித்ததாக காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு முடிவை கோபி எடுத்துள்ளார். இந்த முடிவிற்கு பாக்கியா உடன்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











