Baakiyalakshmi serial: குழந்தை வேண்டாம்.. ராதிகாவை கடுப்பேற்றிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ராதிகாவின் கர்ப்பத்தை தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூற முடியாமல் தவித்து வந்தார் கோபி. தன்னுடைய மகன் வழியில் தான் தாத்தாவாகிய சூழலில் தனக்கு குழந்தை பிறப்பதை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பம் அவருக்கு இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் அவர் ராதிகாவின் கர்ப்பம் குறித்து தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து சென்று ஒரு வழியாக கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வரி எடுக்கும் அதிரடி முடிவும் இந்த பிரமோவில் காணப்பட்டது. தொடர்ந்து இந்த விவாகரத்தில் ஈஸ்வரி, கோபி மற்றும் குடும்பத்தினர் எந்த மாதிரியான முடிவெடுப்பார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial this week 6th to 11th May 2024 promo

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பமான சூழலில் அதை தன்னுடைய அம்மாவிற்கும் குடும்பத்தினருக்கும் சொல்ல முடியாமல் தொடர்ந்து தவித்து வந்தார் கோபி. இந்நிலையில் தன்னுடைய மகன் செழியனின் மகளுக்கு பெயர் சூட்டு விழா நடந்து முடிந்த சூழலில் தற்போது ராதிகா கர்ப்பம் குறித்து ஈஸ்வரியிடம் வெளிப்படுத்துகிறார்.

ஈஸ்வரியிடம் பேசிய கோபி: தன்னுடைய அம்மா ஈஸ்வரியை காரில் தனியாக அழைத்து செல்லும் கோபி, வழியில் வைத்து தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ஒரு குழந்தை வரப்போவதாக கூறுகிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் ஈஸ்வரி எழில் அப்பாவாக போகிறாரா என்று கேட்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி, எழில் இல்லை, நான்தான் அப்பாவாக போகிறேன் என்று கூறி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு வருவதாகவும் அங்கு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி ஈஸ்வரி குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதாகவும் காணப்படுகிறது. தொடர்ந்து ராதிகாவிடம் இந்த குழந்தை தற்போது வேண்டாம் என்று கூறுகிறார் ஈஸ்வரி.

ஈஸ்வரியிடம் ராதிகா ஆத்திரம்: இதையடுத்து பேசும் ராதிகா, இந்த குழந்தை வேண்டுமா? வேண்டாமா என்பதை தான் தான் தீர்மானிக்க வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார். மேலும் தான் சொல்ல வருவதை ஈஸ்வரி ராதிகாவிற்கு விளக்க முயல்கிறார். ஆனால் எதையும் கேட்க விருப்பமில்லாத ராதிகா, ஈஸ்வரி எதையும் கூற வேண்டாம் என்றும் அங்கிருந்து உடனடியாக வெளியே செல்ல வேண்டும் என்றும் ஆத்திரத்துடன் சொல்கிறார். இதனால் ஈஸ்வரி அங்கிருந்து செல்வதாகவும் உடனே கோபியை ராதிகா முறைப்பதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. அவரும் தன்னுடைய அம்மாவை தொடர்ந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.

ஈஸ்வரியின் எண்ணம்: தன்னுடைய மகன் செழியன் மூலம் பேத்தியை எடுத்த கோபி, தற்போது தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகா மூலம் ஒரு குழந்தைக்கு தந்தையாக உள்ளார். ராதிகா கர்ப்பம் அடைந்த சூழலில் அவர் அதை வெளியில் சொல்ல அவமானமாக உணர்ந்ததை பார்க்க முடிந்தது. தன்னுடைய அம்மாவிடமே இந்த விஷயத்தை கூற முடியாமல் கோபி தொடர்ந்து திணறினார். இந்நிலையில் ஒரு வழியாக தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து சென்று அவர் இந்த விஷயத்தை தற்போது கூறியுள்ளார். இந்த வயதில் இந்த குழந்தை அவசியமில்லை என்று ஈஸ்வரியும் நினைத்துதான் இந்த குழந்தை தற்போது வேண்டாம் என்று ராதிகாவிடம் கூறுவதாக காணப்படுகிறது.

ராதிகாவின் திட்டம்: ஆனால் கோபி மீது தனக்கு ஒரு பிடிப்பு வேண்டும் என்பதை தன்னுடைய அம்மா மூலம் உணர்ந்திருக்கிறார் ராதிகா. அதனால் இந்த குழந்தையை பெற்றெடுக்கவே அவர் விரும்புவதை அடுத்தடுத்து எபிசோடுகள் மட்டும் இல்லாமல் இந்த வார பிரமாவிலும் பார்க்க முடிகிறது. ராதிகா தன்னுடைய அம்மா, அண்ணன் மற்றும் தன்னுடைய மகள் மயூ ஆகியோரிடம் தன்னுடைய கர்ப்பம் குறித்து தெளிவாக கூறிய சூழலில், கோபி அடுத்தடுத்து ராதிகாவின் கர்ப்பத்தை மறைத்ததையும் தற்போது ஈஸ்வரியிடம் கூறியுள்ளதையும் பார்க்க முடிகிறது. ராதிகாவின் கர்ப்பம் தற்போது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ள சூழலில் என்ன மாதிரியாக அவர்கள் ரியாக்ட் செய்வார்கள் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X