Baakiyalakshmi: காலம் முழுக்க சிறையில் இருக்கணுமா.. பாக்கியாவிடம் கண்ணீர் விட்டு கதறிய ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகாவை கொலை செய்ய முயற்சித்ததாகவும் இதில் அவரது கரு கலைந்ததாகவும் ஈஸ்வரி மீது கமலா காவல்நிலையத்தில் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்துவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது.
இந்த சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னுடைய மகனை நம்பி ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி எந்த விஷயத்தையும் செய்யாமலேயே தற்போது சிறையில் தள்ளப்படுவதாக காணப்படுகிறது. இதனால் பாக்கியா குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராதிகாவின் அம்மா தன்னுடைய அம்மா ஈஸ்வரி மீது தொடர்ந்து கொலைகாரி பட்டம் சுமத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத கோபி, இப்படி பேசினால் கொலை செய்து விடுவேன் என்று ஆத்திரத்தில் பேசுகிறார். இதனால் மிகுந்த கோபமடையும் கமலா, போலீஸ் நிலையத்தில் சென்று கோபியின் அம்மா ஈஸ்வரி மீது ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக இதில் அவரது கரு கலைந்ததாகவும் புகார் அளிக்கிறார்.
ஈஸ்வரி கைது: இதனால் ஈஸ்வரியை போலீசார் கைது செய்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ஈஸ்வரியிடம் வழக்கறிஞர் கேள்வி எழுப்புகிறார். அவர் தன்னுடைய மருமகள் ராதிகாவை கீழே தள்ளினாரா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். தான் அப்படி எதையும் செய்யவில்லை என்று ஈஸ்வரி அழுதபடியே கூறுகிறார். இதையடுத்து பேசும் ராதிகா, தன்னுடைய மாமியார் தான் தன்னை தள்ளி விட்டதாக கூறுகிறார். இதனிடையே அடுத்ததாக கோபியிடம் வழக்கறிஞர் கேள்வி எழுப்புகிறார். ஈஸ்வரி கோபியிடம் ராதிகாவின் குழந்தை வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தினாரா என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்ப, அவர் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்வதாக காணப்பட்டது.
நீதிமன்ற காவலில் ஈஸ்வரி: இந்நிலையில் ஈஸ்வரியின் சுற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார். இதனால் நிலைகுலைந்து போகும் ஈஸ்வரி, தொடர்ந்து பாக்கியாவிடம் வந்து தான் இனிமேல் சிறையில் தான் காலத்தை கழிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. அவர் கண்ணீருடன் பாக்கியாவின் தோள்களில் முகம் பதித்து அழுவதாகவும் அவரை பாக்கியா சமாதானப்படுத்துவதாகவும் இந்த வார பிரமோவில் காட்சிகள் அமைந்திருந்தன.
மகனை நம்பிய ஈஸ்வரி: பாக்கியாவின் வீட்டை விட்டு வெளியேறிய கோபி, பாக்கியவை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய அம்மாவையும் ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில், தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் ஒருகட்டத்தில் ராதிகாவின் கர்ப்பமும் கலைகிறது. இந்நிலையில் இதுகுறித்து கமலா காவல்நிலையத்தில் ஈஸ்வரி மீது புகார் அளிக்கிறார். இதனால் தற்போது ஈஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கோபியை இந்த விவகாரத்தில் திட்டியதையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











