Baakiyalakshmi: அறிவாளியான நீ எப்படிம்மா இவனை கல்யாணம் செஞ்ச.. அப்பாவின் கேள்வியால் ஆடிப்போன கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த வார பிரமோ வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ரசிகர்களை கவரும்வகையில் இந்தத் தொடரின் எபிசோட்கள் அமைந்து வந்தாலும் தற்போது 3வது இடத்திற்கு பாக்கியலட்சுமி சீரியல் தள்ளப்பட்டுள்ளது.

ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் இந்தத் தொடரின் தற்போதைய பிரமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும்வகையில் அமைந்துள்ளது.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் கவர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த பிரமோக்களை சீரியல் டீம் மற்றும் விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தொடரை ரசிகர்களுக்கு சிறப்பாக கொண்டு சென்று வருகிறது. இருந்த போதிலும் முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தற்போது டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பாக்கியாவின் கட்டாயம்: இந்த தொடரில் அடுத்தடுத்து பிரச்சினைக்குள்ளான தன்னுடைய மற்றும் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மட்டுமில்லாமல் தன்னுடைய பிசினசையும் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது பாக்கியா உள்ளார். செழியன் -மாலினி விவகாரத்தால் ஆத்திரமடைந்த ஜெனி, தற்போது செழியனை பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இதனால் செழியன் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் பரிதவிப்பில் உள்ளனர். ஜெனியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
கேள்விக்குறியான மகன்களின் வாழ்க்கை: இதனிடையே அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் வந்துள்ள நிலையில், அவரிடம் இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஒரு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தார் பாக்கியா. இந்நிலையில் பாக்கியாவை நடுரோட்டில் வழிமறிக்கும் கணேஷ், இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும் உடனடியாக முடிவெடுக்கவும் அச்சுறுத்துகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிற்கு அழைத்து வரப்படும் கோபி ஒருபுறம் பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார்.
ரத்தாகுமா பொருட்காட்சி?: பாக்கியா மற்றும் பழனிச்சாமியின் நட்பை கொச்சைப்படுத்தி பேசி பாக்கியாவிற்கு நிம்மதியில்லாத சூழலை ஏற்படுத்துகிறார். இதனிடையே பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை பெறுகிறார் பாக்கியா. மழை காரணமாக நிகழ்ச்சி ரத்தாகும் சூழல் ஏற்படுகிறது. இதனிடையே அடுத்த வாரத்திற்காக பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கேன்டீன் கான்டிராக்ட் காரணமாக வெளியில் சென்ற பாக்கியா வீட்டிற்கு வரவில்லையே என்று அவருடைய மாமனார் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.
அடுத்த வார பிரமோ: தொடர்ந்து பேசும் ஈஸ்வரி, இந்த பொருட்காட்சி நடக்காது என்று கூறுகிறார். இதையடுத்து பேசும் கோபி, இன்னும் சிறிது நேரத்தில் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு பாக்கியா திரும்புவார் என்று கூறுகிறார். இதையடுத்து அங்கு வரும் ராதிகா, இனிமேல் பாக்கியா குறித்து பேசாதீர்கள் என்று அதிரடியாக கூறுகிறார். தொடர்ந்து பேசும் ஈஸ்வரி, ஏன் ராதிகா தொடர்ந்து பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கிறார் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
அப்பாவால் ஆடிப்போன கோபி: இதையடுத்து அவருக்கு பதிலளிக்கும் ராதிகா, அந்த கான்டிராக்டை பெறுவதற்காக பாக்கியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவரை ஊக்குவிக்கவில்லை என்றாலும் அசிங்கப்படுத்தக்கூடாது என்று கூறுகிறார். தொடர்ந்து அவரிடம் பேசும் கோபியின் அப்பா ராமமூர்த்தி, ராதிகாவை பார்த்து இவ்வளவு அறிவாளியாக இருக்கும் அவர் எப்படி கோபியை போய் திருமணம் செய்தார் என்று கேள்வி எழுப்புவதாக அடுத்த வார பிரமோவில் காணப்படுகிறது. இதனால் கோபி அதிர்ச்சி அடைவதாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











